Fight Club Box Office Day 1: லோகேஷின் ஃபைட் கிளப் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்னன்னு தெரியுமா..?

சென்னை: லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள ஃபைட் கிளப் திரைப்படம் நேற்று வெளியானது. விஜய்குமார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஃபைட் கிளப் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்
மாநகரம் படம் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், 5 படங்களில் கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து லோகேஷ் இயக்கிய படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டின. இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171, கார்த்தியின் கைதி 2 ஆகிய படங்களை இயக்கவுள்ளார்.

 Fight Club Box Office Day 1: Lokesh Kanagarajs Fight Club has collected Rs 2 crore on its first day

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். G Squad என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய லோகேஷ், முதலாவதாக 'ஃபைட் கிளப்' என்ற படத்தை தயாரித்துள்ளார். அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் 'உறியடி' பிரபலம் விஜய்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஃபைட் கிளப் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அதிக கவனம் ஈர்த்திருந்தது. இதனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபைட் கிளப், பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் நேற்று ரிலீஸான ஃபைட் கிளப் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.

இன்னும் சொல்லப் போனால் அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்களே வெளியாகின. வடசென்னையை பின்னணியாக வைத்து அளவுக்கதிகமான வன்முறையுடன் ஃபைட் கிளப் உருவாகியுள்ளது. கதை, திரைக்கதைக்கு முக்கியத்துவம் இல்லாமல் கஞ்சா, வெட்டு, குத்து என ரத்தம் தெறிக்க தெறிக்க இந்தப் படத்தை எடுத்துள்ளனர். லோகேஷ் இயக்கும் படங்கள் மட்டுமில்லாமல், அவர் தயாரிக்கும் படங்களும் இப்படித்தான் இருக்குமா என சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஃபைட் கிளப் திரைப்படம் முதல் நாளில் 2 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் அதிகமான படங்கள் வெளியாகவில்லை என்பதால், ஃபைட் கிளப் படத்தின் இந்த வசூல் ரொம்பவே குறைவு தான் என சினிமா ட்ராக்கர்கள் கூறியுள்ளனர்.

இயக்குநராக நல்லாவே சம்பாதிக்கிறேன், அதேபோல் கமல் ரசிகனாக சினிமாவில் சம்பாதித்த பணத்தை அதிலே தான் முதலீடு செய்வேன் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X