ரத்தக்களறியான படப்பிடிப்பு தளம்… யோகிபாபுவின் உதவியாளர், கார் டிரைவர் மோதல்... மூக்கு உடைப்பு!
சென்னை : நடிகர் யோகி பாபு நடித்து வரும் படப்பிடிப்பு தளத்தில் அடிதடி ஏற்பட்டு ஷூட்டிங் ஸ்பார்ட்டே ரத்தக்களறியானது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழும் யோகிபாபு தன்னுடைய வித்தியாசமான நடிப்பாலும் நகைச்சுவை உணர்வாலும் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
முன்னணி ஹீரோக்கள் பலருடனும் இணைந்து தொடர்ந்து நடித்து வரும் யோகி பாபு 'பொம்மை நாயகி' படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

பொம்மை நாயகி
பா ரஞ்சித் தனது நீலிம் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிக்கும் படத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பொம்மை நாயகி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்து வருகிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில்
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான தன் மகளுக்காக போராடும் ஒரு தந்தையின் கதை தான் பொம்மை நாயகி. அப்பாவாக யோகிபாபு நடித்துள்ளார். அவருக்கு மகளாக சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீமதி நடித்து வருகிறார்.

கைகலப்பு
இதன் படப்பிடிப்பு போடிநாயக்கனூர் குரங்கணி, கொட்டகுடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் யோகிபாபு கலந்துகொண்டு நடித்து வந்தார். அப்போது அவரின் உதவியாளர் சதாம் உசைன் மற்றும் கார் டிரைவர் ராமச்சந்திரன் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் ஆவேசமாக திட்டி சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இவர்கள் திடீரென கைகலப்பு ஏற்பட்டது.

மூக்கில் சத்தம்
இருவரும் ஒருவருக்கொருவர் ஆவேசமாக திட்டிக்கொண்டு திடீரென்று கைகலப்பில் ஈடுபட்டனர். இருவரும் மோதிக் கொண்டதில் யோகி பாபுவின் உதவியாளர் சதாம் உசேனை கார் டிரைவர் ராமச்சந்திரன் மூக்கில் குத்தியதால் ரத்தக் காயம் ஏற்பட்டதாக யோகி பாபுவின் உதவியாளர் சதாம் உசேன் குரங்கணி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.


Click it and Unblock the Notifications











