twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பைரஸியை ஒழிப்பது பெரும் தலைவலி!- இசைஞானி இளையராஜா

    By Shankar
    |

    Fighting piracy legally is a headache: Ilaiyaraja
    சென்னை: திருட்டு சிடி, காப்பியடித்தல் போன்றவை இசைக் கலைஞர்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ஆனால் இவற்றை ஒழிப்பது கலைஞர்களின் வேலையல்ல, என்று இசைஞானி இளையராஜா கூறினார்.

    சமீபத்தில் அவர் இதுகுறித்துக் கூறுகையில், "முன்பெல்லாம் இசை என்பது கலைஞர்களின் வயிற்றுப் பிழைப்பாக இருந்தது. குறிப்பிட்ட கலைஞனின் இசை புகழ்பெற்றால், அவர்களுக்கு ஏதோ ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு காப்பி அடித்துக் கொள்வது வழக்கம்.

    டான் ஜியோவன்னி ஓபராவை கம்போஸ் செய்ய மொசார்ட்டுக்கு கொடுக்கப்பட்டது வெறும் 20 ப்ராங்குகள். ஆனால் அதை இன்றும் பயன்படுத்தி மில்லியன் டாலர்களில் சம்பாதிக்கிறார்கள்.

    பல பெரும் இசைக் கலைஞர்கள் வறுமையில் செத்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படி ஒரு நிலை ஏற்படவில்லை. காரணம் எனக்கு அமைந்த நல்ல தயாரிப்பாளர்கள்.

    ஆனால் இன்றைக்கு உள்ள மோசமான நிலை என்னவென்றால், ஒரு பாடல் ஹிட்டானதுமே அதை உடனடியாக காப்பி அடிக்கிறார்கள். அல்லது திருட்டுத்தனமாக பதிவிறக்கி சம்பாதிக்கிறார்கள். படைத்தவனுக்கு ஒன்றுமில்லாமல் போகிறது.

    அரசாங்கம், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர் என அனைவருக்குமே அது நஷ்டம்தான். இதைத் தடுக்க சட்டம் இருந்தாலும் அது பயனற்றதாக உள்ளது.

    பைரசியை ஒழிப்பது பெரும் தலைவலியாக உள்ளது. ஆனால் இது ஒரு கலைஞனின் வேலையல்ல. கேரளாவில் இதைத் தடுக்க ஒரு சிஸ்டம் வைத்திருக்கிறார்கள்.

    அதையே இங்கும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. நான் என் வேலையைச் செய்கிறேன். மக்கள்தான் இந்த மாதிரி திருட்டு சிடியைத் தடுக்க வேண்டும். அவர்கள் மனது வைத்தால் செய்யலாம். அதுதான் ஒரு கலைஞன் மீது அவர்கள் வைத்துள்ள மரியாதை," என்றார்.

    English summary
    Maestro Ilayarajaa says that fighting against piracy is big headache to artists like him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X