உனக்கு சீரியஸ் பிராப்ளம் இருக்கு.. டாக்டர்கிட்ட போ.. மீராவுக்கு நெத்தியடி பதில் கொடுத்த இயக்குநர்!

Recommended Video

Meera Mithun Clears her Gender : எனக்கு Haters இல்லை-வீடியோ

சென்னை: ஆம்பளையா இரு என டிவிட்டிய மீராவுக்கு இயக்குநர் நவீன் நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்ட.

மாடலான மீரா மிதுன், தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் மீரா மிதுன்.

இதில் இயக்குநர் சேரன் தன்னை தவறான நோக்கத்தில் தொட்டதாக கூறி தொடக்கூடாத நரம்பை தொட்டார். இதனால் ஷாக்கான கமல் குறும்படம் போட்ட மீராவின் முகத்திரையை கிழித்தார்.

காட்சிகள் நீக்கம்

காட்சிகள் நீக்கம்

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீரா மிதுனுக்கு எல்லாமே இறங்கு முகம் தான். நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் மீரா நடித்த காட்சிகள் நீக்கப்பட்டன. அக்னி சிறகுகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

சீண்டும் மீரா

சீண்டும் மீரா

இதனால் கடுப்பான மீரா, பாண்டிராஜ், சிவகார்த்திகேயன், சன் பிக்சர்ஸ், கமல், அக்ஷரா ஹாசன், இயக்குநர் நவீன், தயாரிப்பாளர் சிவா என கோலிவுட்டையும் விளாசி வருகிறார். போதா குறைக்கு விஜய் டிவி மற்றும் சேரனையும் சீண்டியிருக்கிறார்.

ஆம்பளையா இரு

ஆம்பளையா இரு

இந்நிலையில் மீராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அக்னி சிறகுகள் படத்தின் இயக்குநர் நவீன், மீராவை அந்த படத்தில் கமிட் செய்யவே இல்லை, கமிட் செய்யப்பட்டதாக அவரே கூறி கொள்கிறார் என கூறி குண்டைத் தூக்கிப் போட்டார். இதனால் ஆவேசமான மீரா, ஆம்பளையா இரு, உண்மையை பேச தைரியம் வேண்டும் அப்படி இப்படி என வெளுத்து வாங்கினார்.

டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணு

மீராவின் இந்த டிவிட்டுக்கு இயக்குநர் நவீன் பதிலளித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, நான் ஆண் என்பதில் பெருமைகொள்ளும் நபர் இல்லை. பெண்களாய் இருக்கும் என் தாய், சகோதரி மற்றும் மனைவி என்னைவிட அதிக தைரியம் கொண்டவர்கள். உனக்கு சீரியஸ் பிராப்ளம் இருக்கு மீரா. தயவு செஞ்சு டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணு, உன்னோட சில்லி டிவிட்ஸ்க்கு இதுதான் என்னுடைய கடைசி ரிப்ளை. வாழ்த்துகள்.. என தெரிவித்திருந்தார் நவீன்.

அதிகாரம் கொடுத்தது யார்?

இயக்குநர் நவீனின் இந்த டிவிட்டை பார்த்து ஆவேசமான மீரா, அவருக்கு டிவிட்டர் வாயிலாகவே பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, மரியாதையா பேசு, ஒரு பொம்பளைய டாக்டர்கிட்ட போக சொல்ல உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்? அந்தப்படத்தில் என்னுடைய ரோல் பற்றி நாம் பேசிய ஏவி புரூஃப் என்னிடம் உள்ளது. அவற்றை நான் வெளியிட்டால் அது உன்னை மட்டுமல்ல உன் குடும்ப பெண்களையும் பாதிக்கும். நான் வெளியிடட்டுமா? அதனை எதிர்கொள்ள இதே துணிச்சல் உனக்கு இருக்கிறதா? இவ்வாறு கேட்டிருக்கிறார் மீரா மிதுன்.

சிலர் பதிலடி

சிலர் பதிலடி

மீரா மிதுன் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். கோலிவுட்டில் நினைத்தவர்களையெல்லாம் வாய்க்கு வந்தப்படி பேசி வருகிறார் மீரா மிதுன். பலர் அவரது டிவிட்டுகளை கண்டும் காணாமல் இருக்க சிலர் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X