Bigg Boss - பெண்கள் பாதுகாப்பு.. தெளிவுப்படுத்தலனா கேஸ் போடுவேன்.. பிக்பாஸுக்கே ஷாக் கொடுத்த வனிதா

சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பெண்கள் பாதுகாப்பு என்ற வார்த்தையை யார் பயன்படுத்தியது என்பதையும், பிரதீப் எதற்காக வெளியேற்றப்பட்டார் என்பதையும் தெளிவுப்படுத்தவில்லை என்றால் வழக்கு தொடுப்பேன் என்று வனிதா தெரிவித்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. யாருமே பிரபலம் இல்லையே இந்த சீசன் பரபரப்பாக நகருமா என்று சந்தேகப்பட்டவர்கள் எல்லாம் தற்போது ஏழாவது சீசனை பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கின்றனர். ஆரம்பம் முதலே கண்டெண்ட் இருந்தாலும் கடந்த வாரம் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

file a case if does not clarify who used the word womens safety in Bigg boss Says Vanitha

குற்றச்சாட்டு: கடந்த வாரம் நிகழ்ச்சிக்கு கமல் ஹாசன் வந்தபோது மாயா, பூர்ணிமா, ஜோவிகா, நிக்சன் உள்ளிட்டோர் உரிமை குரலை எழுப்பினர். அதனையடுத்து அவர் கதவை திறந்துவைத்துக்கொண்டு பாத்ரூம் செல்கிறார்; அடல்ட் கமெண்ட்ஸ்களாக சொல்கிறார்; இரவில் உற்று உற்று பார்க்கிறார் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கமலிடம் வைத்தார்கள்.

பெண்கள் பாதுகாப்பு: இதனையடுத்து கமல் ஹாசன் வீட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பு முக்கியம் என்று கூறிவிட்டு ஹவுஸ் மேட்ஸ்களில் பெரும்பாலானோர் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்க சொன்னதால் பிரதீப்பை வெளியேற்றினார். அவரது இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல் ஹாசன் செய்ததில் எந்தவித நியாயமும் இல்லை என்று பலரும் ஓபனாக பேசினார்கள்.

வீட்டுக்குள் ஆதரவு: பிரதீப் வீட்டை விட்டு வெளியேறினாலும் அவரது டாபிக்தான் இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டுக்குள் முக்கியமாக ஓடியது. குறிப்பாக விசித்திராவும், அர்ச்சனாவும் அவருக்கு சப்போர்ட் செய்து பேசினர். இந்த சூழலில் நேற்று ஒரு டாஸ்க்கில் ஜோவிகாவை ஏற்றிவிடுகிறார்கள் அவளது வாழ்க்கை அழிகிறது என்று அர்ச்சனாவும், விசித்திராவும் பேசிக்கொண்டது தொடர்பாக இருவருமே விளக்கம் அளித்தார்கள்.

அப்போதும் பிரதீப் டாபிக் வந்தது. அந்த சமயத்தில் பெண்கள் பாதுகாப்பு என்று சொல்கிறீர்கள் என விசித்திரா கேட்க, அதற்கு ஜோவிகாவோ இல்லை பெண்கள் பாதுகாப்பு என்ற வார்த்தையை முதலில் கமல் சார்தான் பயன்படுத்தினார். நாங்கள் பாயிண்ட்டுகளை மட்டும்தான் வைத்தோம் என்று விளக்கமளித்தார்.

வனிதா பேட்டி: இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3யின் போட்டியாளரும், ஜோவிகாவின் தாயுமாகிய வனிதா தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "கதவை திறந்து வைத்துக்கொண்டுதான் பாத்ரூம் போனேன் என்று பிரதீப்பே ஒத்துக்கொண்டார். அதற்கு பிறகுதான் அவர் வெளியேற்றப்பட்டார். அதேபோல் பெண்கள் பாதுகாப்பு என்ற வார்த்தையை நாங்கள் குறிப்பாக நான் பயன்படுத்தவே இல்லை என்பதையும் ஜோவிகா நேற்று விசித்திராவிடம் தெளிவுப்படுத்திவிட்டார்.

ஆனால் வெளியிலோ பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஜோவிகா, பூர்ணிமா, மாயா உள்ளிட்டோர் சொல்லி பிரதீப்புக்கு ஒரு முத்திரை குத்தி அனுப்பிவிட்டார்கள் என்ற பிம்பம் இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பு என்பதை அடிப்படையாக வைத்து பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு இந்த வார இறுதியில் கமல் ஹாசன் தெளிவுப்படுத்த வேண்டும். அவர் அப்படி செய்யாத பட்சத்தில் அது அவரது அரசியல் நிலைப்பாடுக்கே பின்னடைவாக இருக்கும்.

இவ்வளவு பெரிய சேனல், கம்பெனிக்கு ஒரு லீகல் டீம் இருக்கும் அல்லவா. அப்போதே அவர்களை அழைத்து இதற்காகத்தான் பிரதீப்பை வெளியேற்றுகிறோம் என்று தெளிவுப்படுத்தியிருக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்காக பிரதீப்பை எதன் அடிப்படையில் வெளியேற்றினோம் என்று தெளிவுப்படுத்தவில்லை என்றால் நானோ அல்லது எனது மகளோ வழக்கு தொடுப்போம். ஏனெனில் பெண்கள் பாதுகாப்பு என்ற வார்த்தையை முதலில் ஜோவிகா பயன்படுத்தவே இல்லை. அப்படி இருக்கும்போது அவள் மீது அப்படி ஒரு பெயர் வந்திருக்கிறது. எனவேதான் சேனல் தரப்பு தெளிவுப்படுத்த வேண்டும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X