»   »  தம் காட்சி வந்தால் ஏ

தம் காட்சி வந்தால் ஏ

Subscribe to Oneindia Tamil

புகைப்பிடிக்கும் காட்சிகளை படத்தில் வைத்தால் அந்த படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய அரசுஅறிவித்துள்ளது.

சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டன. இதை எதிர்த்துஇந்தி பட தயாரிப்பாளர் மகேஷ் பட் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந் நிலையில் இந்த வழக்கில் மத்திய சுகாதாரத்துறையும் மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும் இணைந்துமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளன. அதில் புகைப்பிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்த பல்வேறுவிதிமுறைகள் இடம் பெறும் என்று அமைச்சர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்த, பல்வேறு விதிமுறைகளை விதிக்க மத்திய அரசுதிட்டமிட்டு வருகிறது. இதில் புகைப்பிடிக்கும் காட்சிகள் அடங்கிய படங்களுக்கு ஏ சான்றிதழ் வழங்குவது, இதுபோன்ற காட்சிகளை திரையிட ஒரு கமிட்டி அமைப்பது ஆகியவை அடங்கும்.

மேலும் ஒரு சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெறுகிறது என்றால், அக்காட்சி ஏன் வைக்கப்பட்டது?என்று அப்படத்தின் தயாரிப்பாளரோ அல்லது இயக்குனரோ விளக்கம் அளிக்க வகை செய்யப்படும்.புகைப்பிடிக்கும் காதபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள், படத்தின் ஆரம்பத்திலோ, கடைசியிலோ, இடையிலோதோன்றி புகைப்பிடிப்பது உடல் நலனுக்கு கேடானது என்று சொல்ல வேண்டும்.

இது போல குறிப்பிட்ட புகைப்பிடிக்கும் காட்சி வரும் போது புகைப்பிடிப்பது உடல் நலனுக்கு கேடானது என்றசெய்தியை தயாரிப்பாளர்கள் இடம் பெற செய்ய வேண்டும். தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி 89சதவீத சினிமாக்களில் கதாபாத்திரங்கள் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெறுகின்றன.

இதுபோன்ற காட்சிகள் இளைய தலைமுறையினர் மீது மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதை சினிமாதுறையினர் உணர வேண்டும். இதை தடுக்க அவர்களாகவே சுய கட்டுப்பாடு விதித்துக் கொள்ள வேண்டும் என்றுவிரும்புகிறோம் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil