மலையாள நடிகை தூக்கிட்டு தற்கொலை… துருவித்துருவி விசாரிக்கும் போலீஸ்!
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரள திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
31 வயதே ஆன அபர்னா கல்கி, முத்துகவ், அச்சையன்ஸ், மேகத்தீரதம் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

மேலும், அட்டசக்தி, மைதிலி வேண்டும் வரம் போன்ற பல்வேறு தொலைக்காட்சியில் ஏராளமான சீரியலில் நடித்துள்ளார்.
நடிகை அபர்னா: சினிமா மற்றும் சின்னத்திரையில் பிஸியாக நடித்து வரும் அபர்னா நாயருக்கு திருமணமாகி சஞ்சித் என்ற கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். திருவனந்தபுரத்தின் கரமனா பகுதியில் வசித்து வரும் இவர், நேற்று இரவு 7.30 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அபர்ணா வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அவரது தாயார் பல முறை கதவை தட்டி உள்ளார். அப்போதும் அவர் கதவை திறக்காததால், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தார்.

குடும்ப பிரச்சனை: நடிகையின் உடலை மீண்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திருவனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு நடிகை அபர்னாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக அபர்னா தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவுன்சில் தேவை: திரைப்பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாக மாறி உள்ளது. வேலை பளு , மன அழுத்தம் போன்ற காரணங்களால் இது போன்ற துயர சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இது போன்ற தற்கொலை எண்ணம் மனதிற்குள் ஏற்படும் போது முடிந்த வரை, தனிமையில் இருப்பதை தவிர்த்துவிட்டு, கவுன்சிலிங் எடுப்பது நல்ல என மன நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











