களைகட்டும் கலைஞர் நூற்றாண்டு விழா.. படையெடுக்கும் திரைப்பிரபலங்கள்.. யார் யார் வந்திருக்காங்க தெரியுமா?
சென்னை: கலைஞர் மு கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகிறார்கள். இதில் அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று கோலாகலமாக நடக்கும் விழாவில் திரைப்பிரபலங்கள் யார் கலந்து கொண்டார்கள் என்று பார்க்கலாமா?
கலைஞர் நூற்றாண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த இடமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது. பல பிரபலங்கள் இதில் கலந்து கொள்வதால், பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு பலமாக உள்ளது.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வந்தது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் கலைஞர் 100 விழா பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
கலைஞர் 100 விழா: அதன்படி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம். சார்பில் 'கலைஞர் 100 விழாவை கடந்த மாதம் 24ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது. இதையடுத்து, கலைஞர் 100 விழா இன்று சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் பெயர் இடம் பெற்ற நிலையில், அழைப்பிதழ் கொடுக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
களைகட்டும் விழா: களைகட்டு நூற்றாண்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த்துடன் கலந்து கொண்டார். அவர் மாஸாக என்ட்ரி கொடுத்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே போல தளபதி விஜய் வெள்ளை நிற சட்டை அணிந்து கொண்டு விழாவில்கலந்து கொண்டார். அதே போல, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், கௌதமி, நடிகர் சிவராஜ் குமார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் வடிவேலு, கார்த்தி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் வெற்றிமாறன், நடிகை ரோஜா ஆகியோர் கலந்து கொண்டார்.
சூர்யா பேச்சு: அதில் பேசி சூர்யா, சினிமா மூலம் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற டிரெண்டை உருவாக்கியதே கலைஞர் அவர்கள் தான். அதே போல அரசியலிலும் பல மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை , தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமை என பலவற்றை கொண்டு வந்த போதும், சினிமாவை கைவிடாமல், கட்டிகாத்து அழைத்து வந்தார். அதனால் தான் அவரை ஆசையாக, அன்பாக கலைஞர் என்று அழைக்கிறோம் என்றார்.


Click it and Unblock the Notifications











