twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐடி ரெய்டில் சிக்கிய சினிமா பிரபலங்கள்: அரசியல் பின்னணி தான் காரணமா? கார்த்தி சொல்றது தான் உண்மையா?

    |

    சென்னை: கார்த்தி நடித்துள்ள 'விருமன்' படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது.

    முத்தையா இ\யக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

    'விருமன்' படம் வரும் 12ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    Bharathi kannamma serial : மறுபடியும் முதல்ல இருந்தா? இழுவை தாங்க முடியல!Bharathi kannamma serial : மறுபடியும் முதல்ல இருந்தா? இழுவை தாங்க முடியல!

    விருமன், பொன்னியின் செல்வன்

    விருமன், பொன்னியின் செல்வன்

    பருத்தி வீரன் படத்தில் இருந்து தொடங்கிய கார்த்தியின் திரைப்பயணம் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. பெரும்பாலும் கமர்சியல் படங்களில் மட்டுமே நடித்து வரும் கார்த்தியின் படங்களுக்கு, ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், விருமன், பொன்னியின் செல்வன் என இரண்டு படங்கள் கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

    விருமன் ஆடியோ ரிலீஸ்

    விருமன் ஆடியோ ரிலீஸ்

    கொம்பன் படத்திற்கு பின்னர் முத்தையா இயக்கியுள்ள 'விருமன்' படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் கார்த்தி. இப்படம் வரும் 12ம் தேதி வெளியாகிறது. அதிதி சங்கர் நாயகியாக அறிமுகமாக,, பிரகாஷ் ராஜ், சூரி, ராஜ்கிரண் என பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில், 'விருமன்' படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி, மதுரையில் தாறுமாறாக நடந்து முடிந்தது. மேலும், 'விருமன்' படத்தின் இரண்டாவது பாடலும் வெளியானது.

    அடுத்தடுத்து ஐடி ரெய்டுகள்

    அடுத்தடுத்து ஐடி ரெய்டுகள்

    'விருமன்' ஆடியோ வெளியீடு, 'பொன்னியின் செல்வன்' ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் என கார்த்தி ஒருபக்கம் பிஸியாக இருந்துகொண்டிருக்கிறார். இதனிடையே, ப்ரொடியூசர் கலைப்புலி எஸ். தாணு, ஃபைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் வீடுகள், அலுவலகங்களில் ஐடி ரெய்டுகள் நடந்தன. இது ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும் அதிர வைத்தது.

    விருமன் பட விநியோகஸ்தர் வீட்டிலும் ரெய்டு

    விருமன் பட விநியோகஸ்தர் வீட்டிலும் ரெய்டு

    கார்த்தி நடித்துள்ள 'விருமன்' படத்தை, அவரது அண்ணனும் நடிகருமான சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்நிலையில், விருமன் படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் ஒருவர் வீட்டிலும் ஐடி ரெய்டு நடந்தது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஏனெனில், மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை, நடிகர் சூர்யா அடிக்கடி துணிச்சலாக வெளிப்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது.

    கார்த்தி கொடுத்த விளக்கம்

    கார்த்தி கொடுத்த விளக்கம்

    இந்நிலையில், சினிமா பிரபலங்களில் வீடுகளில் நடக்கும் தொடர் ஐடி ரெய்டுகள் குறித்து கார்த்தி விளக்கமளித்துள்ளார். அதில், "ஐடி ரெய்டுகள் 3 ஆண்டுகளுக்கு முறை வழக்கமாக நடைபெறுவது தான், இதில், எந்த அரசியல் உள்நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே இதனை அரசியலாக்க வேண்டாம்" எனக் கூறியுள்ளார். கார்த்தியின் இந்த விளக்கம் தற்போது வைரலாகி வருகிறது.

    English summary
    Film celebrities caught in IT raid: Is political background the reason? Is it true what Karthi says?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X