உங்கள் வரவு.. எளிய மக்களுக்கான பெரிய நம்பிக்கை.. விஜய்க்கு வாழ்த்து சொன்ன திரைப்பிரபலங்கள்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு அரசியல் களத்தில் குதித்துள்ள விஜய்க்கு தமிழ்த் திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நேர்மையான மாற்றம்: தளபதி விஜய்யை வைத்து கோட் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் வெட்கட்பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய் தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாடுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், வாழ்த்துக்கள் விஜய் அண்ணா, இன்றைய மாநாடு மூலம் இந்த உத்வேகம் தரும் புதிய பயணத்தை நீங்கள் தொடங்கும்போது. உங்கள் பார்வை பலருக்கு நேர்மறையான மாற்றத்தையும் வெளிச்சத்தையும் கொண்டு வரட்டும் என பதிவிட்டுள்ளார்.
புதிய பயணம்: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க,.தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கு வாழ்த்துகள் என தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதே போல சிவகார்த்திகேயன், "இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.
அர்ப்பணிப்பு: மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள் தளபதி நடிகர் விஜய் அண்ணா. இந்த நம்ப முடியாத மைல்கல்லில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு நடைபெறுகிறது. சினிமாவில் நீங்கள் காட்டிய அதே ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் அரசியலில் கொண்டு வாருங்கள். இந்தப் புதிய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என நடிகர் ஜெயம் ரவி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி: இயக்குநர் பா ரஞ்சித் எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் "என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் திரு.விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்"ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு " மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.
எளிய மக்களுக்கான பெரிய நம்பிக்கை: விஜய் அண்ணாவின் உரையை கேட்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றேன். இந்தப் புதிய பயணம் அவருக்குவெற்றியை தரட்டும் என பதிவிட்டுள்ளார். மேலும், சகிக்குமாரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில் " உங்கள் வரவு, எளிய மக்களுக்கான பெரிய நம்பிக்கையாக அமையட்டும். நல் வாழ்த்துகள்... விஜய் சார்" என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











