'வாவ்.. தலைவா.. வா தலைவா..' ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சினிமா பிரபலங்கள் கருத்து!

By

சென்னை: நடிகர் ரஜினியின் அரசியல் அறிவிப்பை திரைபிரபலங்கள் பலர் வரவேற்று சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பை இன்று உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இது பற்றி அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் மாற்றம்

அரசியல் மாற்றம்

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்து விட்டது. தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. அரசியல் மாற்றம் தேவை. அது கட்டாயம் நிகழும்.

அண்ணாத்த படப்பிடிப்பு

அண்ணாத்த படப்பிடிப்பு

என் உயிரே போனாலும் மக்கள்தான் முக்கியம் என களம் இறங்குகிறேன். ரசிகர்களின் பிரார்த்தனையால்தான் என் உயிர் மீண்டது. என் உயிரை மீட்டுக் கொடுத்த அவர்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை. அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்ததும் கட்சிப் பணிகளில் முழு மூச்சாக இறங்க இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

வாவ்.. தலைவா

ரஜினிகாந்தின் அரசியல் முடிவை திரை பிரபலங்கள் பலர் வரவேற்றுள்ளனர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், வாவ்.. தலைவா வா தலைவா, #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்று கூறியுள்ளார்.

சும்மா அதிருதுல்ல

நடிகர் பிரேம்ஜி, 'சும்மா அதிருதுல்ல..' என்ற சிவாஜி படத்தின் வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளார். ரஜினியின் முடிவை, நடிகர் ஆனந்த ராஜும் வரவேற்று ட்விட் செய்துள்ளார். இவர்களை போல, பல திரையுலகினர் வரவேற்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X