அஞ்சான் படத்துக்கு 'யு' சான்றிதழ் பெற லேப்டாப், ஐ பேடு லஞ்சம்!

By Mayura Akilan

மும்பை: 'அஞ்சான்' படத்துக்கு சான்றிதழ் வழங்க மடிக்கணினி மற்றும் ஐ-பேடு ஆகியவற்றை மத்திய சினிமா தணிக்கை வாரிய தலைவர் ராகேஷ் குமார் லாஞ்சம் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை சி.பி.ஐ. அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மத்திய சினிமா தணிக்கை வாரிய ஆலோசனை குழு உறுப்பினர் சர்வேஷ் ஜெய்ஸ்வால் மற்றும் ஏஜெண்டு ஸ்ரீபதி மிஸ்ரா ஆகியோரை கடந்த 14ஆம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்திய சினிமா படங்களுக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக மத்திய சினிமா தணிக்கை வாரிய தலைவர் ராகேஷ்குமார் கடந்த 18ஆம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்

நீதிமன்றத்தில் ஆஜர்

கைது செய்யப்பட்ட 3 பேரையும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரித்து வந்தனர். வெள்ளிக்கிழமையன்று அவர்கள் மும்பை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அஞ்சான் பட தணிக்கை

அஞ்சான் பட தணிக்கை

அப்போது நீதிபதிகள் முன்னிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில், தமிழில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘அஞ்சான்' படம் தணிக்கைக்காக கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி அவரிடம் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆறு நாட்களுக்குப்பின்

ஆறு நாட்களுக்குப்பின்

அவர் 6 நாட்கள் இருப்பில் வைத்து அதன்பின்னர்தான் அந்த படத்தை பார்த்துள்ளனர். இவ்வாறு நடைமுறைகளை முடித்த பின்னர் கடந்த 5ஆம் தேதி அஞ்சான் படத்துக்கு சான்றிதழ் வழங்கி இருக்கிறார்.

லேப்டாப், ஐ-பேட்

லேப்டாப், ஐ-பேட்

‘அஞ்சான்' படத்துக்கு சான்றிதழ் வழங்க ராகேஷ் குமார் ஒரு மடிக்கணினி மற்றும் ஐ-பேட் லஞ்சமாக வாங்கி இருக்கிறார்.

தெலுங்கு படத்திற்கு ரூ.50000

தெலுங்கு படத்திற்கு ரூ.50000

இது தவிர கடந்த 9ஆம் தேதி ‘சிக்கந்தர்' என்ற தெலுங்கு படத்துக்கு சான்றிதழ் வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்று இருக்கிறார்" என்று தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X