இத மட்டும் பண்ணலேன்னா எங்கேயோ போய்ருவீங்க கீர்த்தி... படக்குழுவினரின் புலம்பல்!
Recommended Video

சென்னை : தமிழ்த் திரையுலகத்தில் இருக்கும் தற்போதைய டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
சூர்யாவோடு 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்தவர், தற்போது விஜய்யுடன் 'விஜய் 62', விக்ரமுடன் 'சாமி 2', விஷாலுடன் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் நல்ல டெடிகேஷன் உள்ள நடிகை என்றாலும், சமீபமாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. அது என்ன தெரியுமா?

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தற்போதைய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். அவருக்கு வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்தாலும் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்றபடி இருக்கிறார். சூர்யா ஜோடியாக கடைசியாக அவர் நடித்து 'தானா சேர்ந்த கூட்டம்' படம் வெளிவந்தது.

டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக
விஜய் ஜோடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும், விக்ரம் ஜோடியாக ஹரி இயக்கத்தில் 'சாமி ஸ்கொயர்' படத்திலும், விஷால் ஜோடியாக லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி 2' படத்திலும் தற்போது நடித்து வருகிறார் கீர்த்தி. இவர் சாவித்ரியாக நடித்திருக்கும் 'மகாநதி' விரைவில் ரிலீஸ் ஆகிறது.

பாராட்டுபவர்கள் கூட
ஷூட்டிங்குக்கு வருவதிலும் டெடிகேஷனோடு நடித்துக் கொடுப்பதிலும் மிகவும் சரியாக இருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ். அதற்காக அவரைப் பாராட்டுபவர்கள் வேறொரு விஷயத்திற்காக சற்றே கடிந்து கொள்கிறார்கள். என்ன காரணம் தெரியுமா?

மேக்கப்புக்கு அதிக நேரம்
கீர்த்தி தினமும் மேக்கப் போட்டு முடிப்பதற்கு 2 மணி நேரத்திற்கும் மேல் எடுத்துக் கொள்கிறாராம். காலையில் வந்ததும் கேரவனுக்குள் செல்பவர் இரண்டு மணி நேரம் கழித்து சுமார் 11 மணி அளவில்தான் கீழே இறங்கி வருகிறாராம்.

மாற்றிக் கொள்ளலாமே
கீர்த்தி சுரேஷ் மேக்கப் முடிந்து வருவதற்காக படக்குழுவினர் அனைவரும் காத்திருக்கிறார்களாம். நல்ல நடிகை எனப் பெயரெடுத்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் இதெல்லாம் தேவைதானா? கொஞ்சம் மேக்கப்பை குறைக்கலாமே கீர்த்தி?


Click it and Unblock the Notifications











