Leo : பட்டைய கிளப்பப்போகும் லியோ பாடல்...மடோனாவை களமிறக்கிய படக்குழு!

சென்னை : லியோ படத்தில் இடம்பெறும் பிரம்மாண்டமான பாடல் பட்டையை கிளப்பும் வகையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

லோகேஷ் இயக்கி வரும் லியோ படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில், விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

Film crew plans to make Leo a hit song

லியோ : விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற உள்ள பிரம்மாண்டமான பாடல் குறித்து கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. லோகேஷ் கனகராஜ் தன் படங்களின் பாடல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார். இருப்பினும் மாஸ்டர் படத்தில் விஜய்க்காக பாடல் காட்சிகளை வைத்திருந்தார். அந்த படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி இப்போது வரை டிரெண்டிங்கில் இருக்கிறது.

பிரம்மாண்டமான செட் : அதே பார்முலாவை லியோ படத்திலும் இம்பிளிமெண்ட் செய்த லோகேஷ் கனகராஜ், பாடல் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லியோ படத்தின் பாடல் காட்சி ஒன்றுக்காக பிரம்மாண்டமான செட் சென்னையில் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது.

Film crew plans to make Leo a hit song

2000 டான்சர்ஸ் : அனிருத்தின் இசையில் விஜய் இப்பாடலை பாடியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. தர லோக்கலான இப்பாடலில் கிட்டத்தட்ட 2000 நடனக்கலைஞர்கள் ஆடியுள்ளதாகவும். இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான பிரம்மாண்டமான பாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

பிறந்த நாள் ஸ்பெஷல் : இந்த பாடலில் பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான மடோனா செபஸ்டின் விஜய்யுடன் இணைந்து நடனம் ஆடிவுள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் ஜூன் 22-ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாள் அன்று இந்த பாடல் வெளியாகலாம் என தெரிகிறது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X