»   »  நடிகையை அறைந்து ரத்தம் வர வைத்தவர் கமல்: சினிமா விமர்சகர் பரபர புகார்

நடிகையை அறைந்து ரத்தம் வர வைத்தவர் கமல்: சினிமா விமர்சகர் பரபர புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: உலக நாயகன் கமல் ஹாஸன் வேண்டும் என்றே நடிகை கார்த்திகாவை ஓங்கி அறைந்ததால் அவரது காதில் இருந்து ரத்தம் வந்தது என பிரபல மலையாள சினிமா விமர்சகர் பெல்லிசேரி தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன், சரண்யா, ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்த படம் நாயகன். அந்த படத்தில் கமல் ஹாஸனின் மகளாக மலையாள நடிகை கார்த்திகா நடித்திருந்தார்.

கார்த்திகா நாயகன் தவிர்த்து பூவிழி வாசலிலே படத்திலும் நடித்துள்ளார்.

நாயகன்

நாயகன்

நாயகன் படம் குறித்து பிரபல மலையாள சினிமா விமர்சகர் பெல்லிசேரி மலையாள வார இதழ் ஒன்றுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கமல் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

கமல் ஹாஸன்

கமல் ஹாஸன்

நாயகன் பட போட்டோஷூட்டின்போது கமல் ஹாஸன் கார்த்திகாவின் தோளில் கை போட்டுள்ளார். இது பிடிக்காமல் அவர் கமலின் கையை தட்டியுள்ளார் என்கிறார் பெல்லிசேரி.

கார்த்திகா

கார்த்திகா

கார்த்திகா கையை தட்டிவிட்டும் கமல் மீண்டும் அவரது தோளில் கை போட்டார். இதனால் கடுப்பான கார்த்திகா மீண்டும் அவரது கையை தட்டிவிட்டு என்னை யாரும் தொட்டு நடிப்பது பிடிக்காது என்று முகத்தில் அடித்தது போன்று கமலிடம் தெரிவித்தார் என்று பெல்லிசேரி கூறியுள்ளார்.

அறை

அறை

படத்தில் ஒரு காட்சியில் கமல் கார்த்திகாவை கன்னத்தில் அறைய வேண்டும். கமல் போட்டோஷூட்டின்போது நடந்ததை மனதில் வைத்து கார்த்திகாவை ஓங்கி அறைந்தார். இதில் கார்த்திகாவின் காதில் இருந்து ரத்தம் வந்தது என பெல்லிசேரி தெரிவித்துள்ளார்.

தமிழே வேண்டாம்

கமல் ஹாஸனின் செயலை பார்த்து தான் கார்த்திகா இனி நான் தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று கூறியதுடன் அதன்படியே செய்தார் என்று பரபரப்பை கிளப்பியுள்ளார் பெல்லிசேரி.

English summary
A famous Mollywood film critic accused Kamal Haasan of hurting actress Karthika wantonly during the shoot of the movie Nayakan.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil