டப்பிங்கில் இருந்தபோது பாதிப்பு.. புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்றுவந்த பிரபல சினிமா இயக்குனர் மரணம்!
கொச்சி: புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த பிரபல சினிமா இயக்குனர் மரணமடைந்தார்.
Recommended Video
இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் பிரபலங்கள் உயிரிழந்து வருவது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, மலையாள சினிமா உலகில் மூத்த கலைஞர்கள் பலர் மரணமடைந்துள்ளனர்.

இயக்குனர் யதீன்தரதாஸ்
இப்போது மலையாள இயக்குனர் யதீன்தர தாஸ் மரணமடைந்துள்ளார். இது மலையாள திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர், இயக்குனர் பாலுமகேந்திரா, மலையாள இயக்குனர்கள் எம்.வின்சென்ட், பொற்றேகாட், சேதுமாதவன் உள்பட பல முன்னணி இயக்குனர்களுடன் பல படங்களில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றியவர்.

திரைப்பட விழா
பின்னர் கவியூர் பொன்னம்மா, வேணு நாகவல்லி, பாபு நம்பூதிரி உள்பட பலர் நடித்த 'ஊமன திங்கள்' (Oomana Thinkal) என்ற படத்தை இயக்கினார். 1983 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் கவனிக்கப்பட்டது. இதற்கு பிரபல மலையாள இசை அமைப்பாளர் எம்.பி.ஶ்ரீனிவாசன் இசை அமைத்திருந்தார். இந்தப் படம், ஜெர்மன் குழந்தைகள் திரைப்பட விழாவில் விருது பெற்றது.

மம்மூட்டி நடித்த படம்
இதையடுத்து மம்மூட்டி, நெடுமுடி வேணு, சித்ரா, சுகுமாரி, திலகன் நடிப்பில் ஒடுவில் கிட்டிய வர்தா (Oduvil Kittiya Vartha) என்ற படத்தை இயக்கினார். 1985 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படமும் அப்போது பேசபட்டது. இதையடுத்து சில படங்களை இயக்கிய இவர், பல டாக்குமென்டரி படங்களையும் இயக்கி உள்ளார். இப்போது சாய்குமார் நடிக்கும் உள்கன்னல் என்ற படத்தை இயக்கி வந்தார்.

புற்று நோய் பாதிப்பு
இந்த படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். அவர், கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மறைவை அடுத்து மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











