ரூ. 7.5 லட்சத்திற்கு பைக் வாங்கி ஓட்டிய பட விநியோகஸ்தர் விபத்தில் பலி

By Siva

பெங்களூர்: பிரபல கன்னட பட விநியோகஸ்தர் அஜய் சந்தானி பைக் விபத்தில் மரணம் அடைந்தார்.

பிரபல கன்னட பட விநியோகஸ்தர் அஜய் சந்தானி(48). அவர் தனது மனைவி, மகளுடன் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வசந்த்நகரில் வசித்து வந்தார். அஜய்க்கு ஸ்போர்ட்ஸ் பைக் என்றால் மிகவும் பிடிக்கும்.

Film distributor Ajay Chandani dies in bike accident

அவர் ரூ. 7.5 லட்சத்திற்கு சுசுகி வி ஸ்டார்ம் 650 எக்ஸ்.டி. பைக் ஒன்றை வாங்கினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் தனது புது பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தார். கன்னிங்ஹாம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பைக் அஜய்யின் கட்டுப்பாட்டை இழந்து அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் சுற்றுச் சுவரில் மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அஜய் அருகில் உள்ள ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் ஒன்றரை மணிநேரம் உயிருக்கு போராடினார். இறுதியில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த திரையுலக பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கன்னட திரையுலகின் முக்கியமான நபரும், பலருக்கு நண்பருமான அஜய் மரணம் அடைந்த தகவல் அறிந்து மிகவும் கவலையாக உள்ளது. அவரை அனைவரும் மிஸ் பண்ணுவோம். அவரின் குடும்பத்தாருக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். #AjaypalRIP

பெங்களூரில் இந்தி படங்களை விநியோகித்த மிகப் பெரிய விநியோகஸ்தரான மறைந்த பால் சந்தானியின் மகன் தான் அஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

சாலையில் விளக்கு இல்லாமல் இருட்டாக இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக அஜய் வீலிங் செய்தபோது பிரச்சனையாகி விபத்து ஏற்பட்டதாக போலீசார் நினைத்தார்கள். அதன் பிறகு அதிவேகம் தான் விபத்திற்கு காரணம் என்று தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X