twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு கதை எப்படி திரைப்படமாக உருவாகிறது - சான் லோகேஷுடன் விவாதியுங்கள்

    |

    சென்னை: சினிமாவில் தன்னுடைய படத்தொகுப்பு திறமையினால் முன்னணிக்கு வந்துள்ளவர் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ். இவர் சமீபத்தில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் படத்தொகுப்பாளர். இவர் வளரும் கலைஞர்களுக்காகவும், படத்தொகுப்பாளராகவேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கும் பயன்படும் வகையில் வரும் சனிக்கிழமையன்று வடபழனியில் உள்ள பியூர் சினிமா புத்தக அங்காடி,பார்வையாளர்களுடன் கலந்துரையாடுகிறார். விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்துகொண்டு தங்களின் திறமையை வளர்த்துக்கொள்ளலாம்.

    ஒரு இயக்குநர் என்னதான் தன்னுடைய திறமையை பயன்படுத்தி ஒரு குப்பை கதையை திரைப்படமாக எடுத்திருந்தாலும், வசனங்களும், காதுகளுக்கு இனிமையான பாடல்கள் இருந்தாலும் கூட, அந்த திரைப்படத்தை முழுமையாக, பார்வையாளர்கள் ரசிக்கும்படியாக முழுமை பெற்ற திரைப்படமாக உருமாற்றி தருவது படத்தொகுப்பாளர் தான்.

    ஒரு படத்தொகுப்பாளர் நினைத்தால் நல்ல கதையம்சம் கொண்ட படத்தைக் கூட படத்தொகுப்பில், காட்சி கொஞ்சம் மாற்றியமைத்து கதையையே கந்தலாக்க முடியும். அதேபோல் ஒரு குப்பை கதையைக் கூட, தன்னுடைய திறமையினால் காட்சிகளை ஒழுங்காக கோர்வையாக காட்சிப் படுத்தி தரமுடியும். அதற்காகவே எத்தனையோ படத்தொகுப்பாளர்கள் விருதுகளையும் வாங்கியிருக்கிறார்கள்.

    Film Editor San Lokesh going to discuss Editing at Vadapalani

    அந்த வகையில் தன்னுடைய படத்தொகுப்பு திறமையினால் முன்னணிக்கு வந்துள்ளவர் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ். இவர் வளரும் கலைஞர்களுக்காகவும், படத்தொகுப்பாளராகவேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கும் பயன்படும் வகையில் வரும் சனிக்கிழமையன்று பார்வையாளர்களுடன் கலந்துரையாடுகிறார். விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்துகொண்டு தங்களின் திறமையை வளர்த்துக்கொள்ளலாம்.

    பொன்ராம்-சசிகுமார் கூட்டணியில் எம்.ஜி.ஆர் மகன் படபூஜை - டப்மாஷ் மிருணாளினி ஜோடிபொன்ராம்-சசிகுமார் கூட்டணியில் எம்.ஜி.ஆர் மகன் படபூஜை - டப்மாஷ் மிருணாளினி ஜோடி

    படத்தொகுப்பாளர் சான் லோகேஷுடன் கலந்துரையாடல்

    இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7,மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

    தமிழ் ஸ்டுடியோ தமிழ் சினிமா கலைஞர்களுடன் பல்வேறு கலந்துரையாடல்களைப் பல்வேறுவிதமாக நடத்தி வருகிறது. தமிழ் சினிமா நூற்றாண்டு தொடர் கலந்துரையாடல், பயிற்சிப்பட்டறைகள், திரையிடல் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளுடன் சேர்ந்து நிகழ்கால தமிழ் சினிமாவை மையப்படுத்தியும், தொடர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி வருகிறது.

    Film Editor San Lokesh going to discuss Editing at Vadapalani

    அவ்வகையில், இந்த வாரம் உறுமீன் படத்தின் மூலம் அறிமுகமான படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் வரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வடபழனியில் உள்ள ப்யூர் சினிமா புத்தக நிலையத்தில் கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.

    சமீபத்தில் திரையரங்கில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை, ராட்சசன், தர்மபிரபு, இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகவிருக்கும் கண்ணை நம்பாதே ஆகிய திரைப்படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.

    இயக்குனர் மேஜையிலிருந்து படத்தொகுப்பாளர் மேஜைக்கு வரும் கதை எவ்வாறு ஒரு திரைப்படமாக மாறுகிறது. மேலும் அதற்கான தொடர்பு என்ன? படத்தொகுப்பில் கையாள வேண்டிய உத்திகள் என்ன? வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியில் படத்தொகுப்பில் அடைந்துள்ள மாற்றங்கள் குறித்த கேள்விகளுடன் கலந்துரையாடலாம்.

    அனைவரும் வருக. அனுமதி இலவசம்.
    28.09.2019, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு.
    தொடர்புக்கு: 9840644916

    நிகழ்விற்கு வர விரும்பும் நண்பர்கள் உங்கள் வரவை உறுதிபடுத்துங்கள். முகனூல் சனிக்கிழமை அன்று உங்களுக்கு நினைவுப்படுத்தும்.

    Read more about: cinema editor
    English summary
    The Editor San Lokesh has come to the forefront with his Editing talent. He will be meeting with audiences this coming Saturday to benefit budding artists and those who dream of becoming a filmmaker. Interested people can participate and hone their skills.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X