எம்ஜிஆர் சமாதி அருகே அனுமதி இல்லை... வடபழனியில் சினிமா தொழிலாளர்கள் உண்ணாவிரதம்!
சென்னை: எம்ஜிஆர் சமாதி அருகே உண்ணாவிரதமிருக்க அனுமதி மறுக்கப்பட்டதால், வடபழனியில் உண்ணாவிரதமிருக்கிறார்கள் சினிமா தொழிலாளர்கள்.
தயாரிப்பாளர்களுக்கும், சினிமா (பெப்சி) தொழிலாளர்களுக்கும் சம்பள பிரச்சினை தொடர்பாக ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்துள்ளது.
சம்பள உயர்வு கோரி, சினிமா தொழிலாளர்கள் சென்னை எம்.ஜி.ஆர். சமாதி அருகில் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்கள்.
ஆனால், எம்.ஜி.ஆர். சமாதி அருகில் உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
வடபழனியில்...
இதைத்தொடர்ந்து சினிமா தொழிலாளர்கள் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் சங்க கட்டிடத்தில் (கமலா தியேட்டர் அருகில்) உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்த உண்ணாவிரதத்தில் சினிமா தொழிலாளர்களுடன் அவர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரும் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











