Film Fare Awards 2023: கமல், கடைசி விவசாயி முதல் பொன்னியின் செல்வன், சாய் பல்லவி வரை கம்ப்ளீட் லிஸ்ட்

சென்னை: 2023 ஆம் ஆண்டிற்கான தென் இந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நேரடி தமிழ் திடைப்படங்களான இயக்குநர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன், தனுஷின் திருச்சிற்றம்பலம், உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம், இயக்குநர் மணிகண்டனின் கடைசி விவசாயி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளது. 68வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் வென்ற தமிழ்நாடு படங்கள், நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் குறித்து விரிவாகக் காணலாம்.

68வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் தமிழ் 2023, சிறந்த நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வருடந்தோறும் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன படங்களில் சிறந்த படங்கள் மற்றும் அதில் பணியாற்றிய திறமையாளர்களை பாராட்டும் வகையில் ஃபிலிம் ஃபேர் விருதுகளை இணையத்தில் அறிவித்து வருகின்றது.

Kamal Haasan Dhanush

விருதுகள் விபரம்:

சிறந்த படம் - பொன்னியின் செல்வன் பகுதி 1

சிறந்த இயக்குனர் - மணிரத்னம் (பொன்னியின் செல்வன் பகுதி 1)

Kamal Haasan Dhanush

சிறந்த திரைப்படம் (விமர்சகர்கள் தரப்பில் இருந்து அதிகம் பாராட்டைப் பெற்ற படம்) - கடைசி விவசாயி (இயக்குநர் மணிகண்டன்)

சிறந்த நடிகர் லீட் ரோல் - கமல்ஹாசன் (விக்ரம்)

Kamal Haasan Dhanush

சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தரப்பில் இருந்து அதிகம் பாராட்டைப் பெற்ற நடிகர்) - தனுஷ் (திருச்சிற்றம்பலம்),

ஆர். மாதவன் (ராக்கெட்ரி)

சிறந்த நடிகை லீட் ரோல் - சாய் பல்லவி (கார்கி)

சிறந்த நடிகை (விமர்சகர்கள் தரப்பில் அதிகம் பாராட்டைப் பெற்ற நடிகை) - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)

Kamal Haasan Dhanush

துணை வேடத்தில் சிறந்த நடிகர் - காளி வெங்கட் (கார்கி)

துணை வேடத்தில் சிறந்த நடிகை - ஊர்வசி (வீட்ல விசேஷம்)

சிறந்த இசை ஆல்பம் - ஏ.ஆர் ரஹ்மான் (பொன்னியின் செல்வன் பாகம் 1)

Kamal Haasan Dhanush

சிறந்த பாடல் வரிகள் - பாடலாசிரியை தாமரை (மறக்குமா நெஞ்சம் - வெந்து தணிந்தது காடு)

சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) - சந்தோஷ் நாராயணன் (தேன்மொழி - திருச்சிற்றம்பலம்)

Kamal Haasan Dhanush

சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்) - அந்தரா நந்தி (அலைக்கடல்- பொன்னியின் செல்வன் பகுதி 1)

சிறந்த அறிமுக நடிகர் - பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே)

சிறந்த அறிமுக நடிகை - அதிதி சங்கர் (விருமன்)

Kamal Haasan Dhanush

சிறந்த ஒளிப்பதிவு - ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் பகுதி 1) அதேபோல் தெலுங்கில் சிறந்த ஒளிபதிவுக்கு ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக கே.கே.செந்தில் குமார் பெற்றுள்ளார்.

மேற்குறிப்பிடப்பட்ட படங்களுக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியாக உள்ளனர். மேலும் அவர்களது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X