திரைப்பட பைனான்சியர் மகள் திருமணம் ...யாருக்கு சம்மந்தி ஆக போகிறார் தெரியுமா?
சென்னை : பிரபல திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர் மற்றும் திரையரங்கு அதிபர் அன்புச்செழியன் - ராஜேந்திரன் ஐஏஎஸ் இல்லத் திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது.
இல்லற வாழ்க்கையில் இணையும் இளம் தொழில்முனைவோர்: கோபுரம் சினிமாஸ் உரிமையாளர் சுஷ்மிதா மற்றும் சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் சரணின் திருமணம் பிப்ரவரி 21 அன்று நடைபெறவுள்ளது
இளம் தொழில்முனைவோரும், கோபுரம் சினிமாஸ் உரிமையாளருமான சுஷ்மிதா மற்றும் சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் சரணின் திருமணம் 21 பிப்ரவரி 2022 அன்று திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது.

அன்புச்செழியனின் மகள்
காலையில் திருமணமும், மாலையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறும் என்று பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது.பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர் மற்றும் கோபுரம் சினிமாஸ் நிறுவனர் ஜி என் அன்புச்செழியனின் மகள் தான் சுஷ்மிதா.

கூடுதல் தகவல்
எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உளவியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற சுஷ்மிதா, அதைத் தொடர்ந்து எம்பிஏ படித்தார். 25 வயதே ஆகும் இவர் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை நிர்வகித்து பல இளைஞர்களுக்கு உதாரணமாக விளங்குகிறார் என்பது கூடுதல் தகவல். குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் சன் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர்களில் ஒருவரான ராஜேந்திரன் ஐஏஸ்-இன் மகன் தான் சரண். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மைத்துனர் ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் விதிமுறைகளை
சரண் பி டெக் மற்றும் எம்பிஏ முடித்து சன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநராக உள்ளார். 25 வயதில் தனக்கென ஒரு நற்பெயரை உருவாக்கியுள்ளார்.திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி கோவிட் விதிமுறைகளை பின்பற்றி பிரமாண்டமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிந்த உண்மை
சினிமா திரைப்பட தயாரிப்பாளர்கள் பலருக்கும் மிக மிக நெருக்கமாக இருந்து மிகப்பெரிய பிரச்சனைகள் வரும் பொழுதெல்லாம் மிகவும் முக்கியமான ஒரு பெயர் அனைவர் மனதிலும் வருமென்றால் அது பைனான்சியர் அன்புச்செழியன் தான் . இவர் ஃபைனான்ஸ் செய்தால் அந்த திரைப்படங்கள் இரட்டிப்பு மடங்காக பிரமாண்டம் பெறுகிறது என்பது பலருக்கும் தெரிந்த உண்மை தான். அவருடைய சொந்த மகள் திருமணத்தை எவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த முடியும் என்று பல திட்டங்கள் தீட்டி வருகிறார் .

வாழ்த்துக்களை தொடர்ந்து சொல்லி
அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஒருபக்கம் இருக்க இவருக்கு மிகவும் நெருக்கமான நலம் விரும்பிகள் மதுரை மற்றும் சென்னையில் குறிப்பாக அதிகம் உள்ளனர். ஒட்டுமொத்தமாக அவர்கள் அனைவரும் திரளாக திரண்டு வந்து இந்த திருமண வைபவத்தை ஒரு மாபெரும் வெற்றி விழாவாக மாற்றி அமைப்பார்கள் என்று நம்பிக்கையுடன் அனைவரும் இருக்கிறார்கள். இப்பொழுது இருந்தே பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தொடர்ந்து சொல்லிய வண்ணம் உள்ளனர். திருமணம் சம்பந்தப்பட்ட பல போட்டோக்கள் விரைவில் இணையதளத்தில் ஷேர் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











