twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அநீதியான தீர்ப்பு இது… வில்லன் ஆனந்தராஜ்: ஜெ.மீண்டும் முதல்வராவார் – கே.பாக்யராஜ்

    By Mayura Akilan
    |

    சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிராக அநீதியான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று வில்லன் நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார். தடைகளை தகர்த்தெறிந்து விடுதலையாகி வந்து மீண்டும் முதல்வர் ஆவார் ஜெயலலிதா என்று இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் கூறியுள்ளார்.

    சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று, பெங்களூர் சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், அவருக்கு எதிரான தீர்ப்புக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையிலும் திரையுலகின் அனைத்து அமைப்புகளும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

    சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இந்த உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

    உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ள நடிகர்கள் தங்களின் கருத்துக்களை கொதிப்புக்களுடன் தெரிவித்து வருகின்றனர்.

    அநீதி இழைக்கப்பட்டுவிட்டது

    அநீதி இழைக்கப்பட்டுவிட்டது

    கூட்டத்தில் பேசிய வில்லன் நடிகர் ஆனந்தராஜ்,

    இது ஜெயலலிதாவிற்கு எதிரான அநீதி. நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து விடுதலையாவார் என்றார். தனக்கு எதிரான தடைகளை உடைத்து மீண்டும் அவர் முதல்வராவார் என்றும் கூறினார்.

    பாக்யராஜ் கொதிப்பு

    பாக்யராஜ் கொதிப்பு

    திமுகவின் ஆதரவாளராக இருந்த நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றார். போராட்டத்தில் பேசிய அவர், இந்த வழக்கில் இருந்து விடுதலையாகி அவர் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

    புகழைக் கெடுக்க சதி

    புகழைக் கெடுக்க சதி

    கூட்டத்தில் பேசிய வசனகர்த்தா லியாகத் அலிகான்,

    அம்மாவின் புகழ், செல்வாக்கை சீர்குலைக்க போடப்பட்ட வழக்கு இது. தீர்ப்பு வந்த உடனே தான் எல்லாரும் ஜெயலலிதாவின் பக்கம்தான் என்பதை உணர்ந்து எதிர்கட்சியினர் ஆடிப்போயுள்ளனர் என்றார்.

    மக்களின் போராட்டம்

    மக்களின் போராட்டம்

    தங்களின் தலைவிக்கு அவமானம் வந்துள்ளது என்று தமிழ் திரை உலகம் பொங்கி எழுந்துள்ளது.அம்மாவுக்கு ஆதரவாக கட்சி சார்ப்பு இன்றி மக்கள் உண்ணாமல், உறங்காமல் போராடுகின்றனர

    ஒரே தலைவி ஜெ.தான்

    ஒரே தலைவி ஜெ.தான்

    அம்மா பிரதமாகவேண்டும் என்று மக்கள் ஏற்றுக்கொண்டனர். அகில இந்தியாலும் ஜெயலலிதாவின் புகழ் பரவியுள்ளது. அனைவரின் மனதிலும் ஒரே உணர்வு உள்ளது. தமிழகத்தையும், தமிழ் திரை உலகையும் காப்பது ஜெயலலிதாதான் என்றார் லியாகத் அலிகான்.

    English summary
    Tamil film world is today observing a token fast in support of Jayalalithaa who punished in wealth case. Actor Anandharaj, director Bakyaraj, and Liakath Ali khan support for Jayalalitha.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X