திரையுலகம் முற்றிலும் முடங்கியது... நிச்சயம் மீண்டு வருவோம்.. விஜய் ஆண்டனி நம்பிக்கை !

சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி, கொரோனாவால் திரையுலகம் முற்றிலுமாக முடக்கியுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீக்கிரம் எழுந்திருப்பது, உரையாடுவது, நடிப்பது என அனைத்தையும் இழப்பதாக கூறியுள்ளார்.

இந்த மோசமான நிலையிலிருந்து நாம் மீண்டு வருவோம் என்று நம்புவதாகவும் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

படப்பிடிப்பு நிறுத்தம்

படப்பிடிப்பு நிறுத்தம்

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் கடந்த 10ந் தேதியில் இருந்து முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது சமூக வலைத்தள பக்கத்தில், படப்பிடிப்பை தவறவிட்டதை பதிவிட்டுள்ளார்.

அழகான இடத்தை

அழகான இடத்தை

அந்த பதிவில், "நான் சீக்கிரம் எழுந்திருப்பதை இழக்கிறேன், படப்பிடிப்பு இடத்திற்குச் செல்வது, கதாபாத்திரத்திற்கு தயாராவது, உரையாடல்களைப் படிப்பது, இயக்குனர் & டிஓபியுடன் தயாரிப்பு விவாதங்கள், நடிப்பு, படத் தொகுப்பு என்று அழைக்கப்படும் அந்த அழகான இடம் அனைத்தையும் தவறவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

திரும்பி வருவோம்

மேலும், கோவிட் பல தொழில்களைப் போலவே திரையுலகையும் முற்றிலுமாக முடக்கியுள்ளது. இந்த மோசமான நிலையிலிருந்து நாம் திரும்பி வருவோம் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். அதுவரை, எனது அன்பான ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருங்கள் எனதனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Thalapathy Vijay வீட்டை வாங்கிய Vijay Antony? | S.A.chandrasekhar,Thalapathy Vijay
கைவசம் உள்ளன

கைவசம் உள்ளன

நடிகர் விஜய் ஆண்டனி காக்கி, பிச்சைக்காரன் 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், இவர் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கும் அக்னி சிறகுகள் படத்தில் நடிக்கிறார். மேலும் இவர் நடிப்பில் கோடியில் ஒருவன் திரைப்படம் வெளியீட்டுக்கு தயராக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X