தியேட்டர்காரர்கள் திருந்த இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது!

By Shankar

Recommended Video

சினிமா ஸ்ட்ரைக் முடியுமா?..முடியாதா?- வீடியோ

தமிழ் படங்கள் கூட சமீப வருடங்களில் நான்கு வாரங்கள் கடந்து திரையரங்குகளில் ஓடுவது இல்லை. அதற்கு பரிகாரம் தேடுவது போல் தயாரிப்பாளர்கள் சங்கம் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சரியோ தவறோ இன்று வரை உறுதியாக வேலை நிறுத்தத்தை நடத்தி வருகின்றனர்.

தங்கள் தலைமையை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் நம்புவதால் இது சாத்தியமாகி உள்ளது.

Film industry hails Vishals stand in strike issue

திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைமை பலவீனமாகவும், அனைவரின் ஆதரவு உள்ள தலைமை இல்லாததால் சுயமாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுகிறது.

திரையரங்குகளை நடத்துவதற்கு சட்டப்படி இருக்க வேண்டிய புரஜெக்டர் வசதி திரையரங்குகளில் அவசியம் இருக்க வேண்டும் என்பதைத் தவிர்க்கவே இப்போது வரை முயற்சிக்கிறார்கள்.

வேலை நிறுத்தத்தின் பிரதான விஷயமாக தயாரிப்பாளர்கள் சங்கம் முன்வைக்கும் சொந்த புரஜெக்டர் வசதி என்பதற்கு தியேட்டர் சங்கத்தினரிடம் தெளிவான பதில் இல்லை.

தமிழகத்தில் 300க்கும் அதிகமான தியேட்டர்களில் புரஜெக்டர்கள் சொந்தமாக நிறுவப்பட்டுள்ளன. இவற்றுக்கும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் VPF கட்டணம் இதுவரை செலுத்தி வருகிறார்கள். அந்த பணம் யாருக்குப் போகிறது என்று தயாரிப்பாளர்கள் கேட்கும் கேள்விக்கு தியேட்டர் உரிமையாளர்கள் திரு திருவென விழிக்கிறார்கள்.

தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளில் முக்கியமானது ஆன்லைன் டிக்கட் புக்கிங் சார்ஜ் பற்றியது. முதல் போட்டு படம் தயாரிப்பது நாங்கள், பணம் கொடுத்து வாங்குவது விநியோகஸ்தர், அட்வான்ஸ் கொடுத்து திரையிடுவது திரையரங்குகள்... ஆனால் இதில் எந்த வகையிலும் சம்பந்தமில்லாது பணம் சம்பாதிக்கும் நிறுவனத்துக்கு வக்காலத்து வாங்குவது ஏன்?

அதை முதலாளிகளான நாம் இருவரும் சேர்ந்து கட்டணத்தைக் குறைத்து நடத்தலாமே என்கிற தயாரிப்பாளர்கள் சங்க கேள்விக்கு தியேட்டர் சங்கத்திடம் நேர்மையான பதில் இல்லை.

நாங்கள் தயாரிக்கும் படங்கள் சரியாக ஓடவில்லை, வசூல் மோசமாக இருக்கிறது. முதல் தேறுவதே கஷ்டமாக இருக்கிறது என்கிறீர்கள், ஏற்றுக் கொள்கிறோம். நேர்மையாக நடப்பதாக கூறும் நீங்கள் ஏன் டிக்கெட் விற்பனையை முழுமையாக கணினி மயமாக்கி தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களுக்கு வசூல் விபரங்களை தினந்தோறும் அறிந்து கொள்ளத் தர தயங்குவது ஏன்? என்கிற விஷாலின் கோரிக்கைக்கு தியேட்டர் சங்கம் பதில் கூற முடியாமல் பம்முகிறது.

எம்.ஜி., அட்வான்ஸ் கொடுத்து படம் திரையிடும் திரையரங்குகள் 60%, 70% என்ற அடிப்படையில் விநியோகஸ்தர்களுக்கு பங்குத் தொகை தருகிற போது, அட்வான்ஸ்சும் கொடுக்காமல், எந்த செலவும் செய்யாமல், படம் கொடுக்கும் தயாரிப்பாளரிடம் காட்சிக்கு 100 டிக்கட் வாங்கி தியேட்டர் மேனேஜருக்கு ஒரு படத்திற்கு 5000 ம் கவர் கொடுத்து திரையிடும் படங்களுக்கு 50%, 40% பங்குத் தொகை தருவதுஎந்த ஊரு நியாயம் என கேட்கும் தயாரிப்பாளர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

இந்த ஸ்ட்ரைக் நீண்ட நாட்களாக நடந்தாலும், அதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் வைத்துள்ள கோரிக்கைகள் நியாயமாக இருப்பதாலும், பொதுமக்களுக்கும் ஆதரவாக இருப்பதாலும் அனைத்து தரப்பிலும் ஆதரவு பெருகியுள்ளது. தியேட்டர்காரர்கள் திருந்த இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X