தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி.. தமிழக அரசுக்கு திரையுலகம் நன்றி!
சென்னை: திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து திரைத்துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
Recommended Video

திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
நூறு சதவிகித இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று திரைத்துறையினர் கோரிக்கை வைத்து வந்தனர்.

விஜய் சந்திப்பு
தியேட்டர் அதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்கள் இந்த கோரிக்கையை வைத்து வந்தன. சமீபத்தில் நடிகர் விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தார். இந்நிலையில் பார்வையாளர்களின் அனுமதியை 100 சதவீதமாக அதிகரிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாரதிராஜா அறிக்கை
இதையடுத்து திரையுலகினர் இதற்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட இந்த பொங்கல் முதல் அனுமதி அளித்ததற்கு தமிழக முதலமைச்சருக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதுகாப்பு ஏற்பாடு
இந்த அனுமதிக்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் எங்கள் நன்றிகள். 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கும் போது, திரையரங்குகளும், பார்வையாளர்களும், தமிழக அரசு கொடுத்துள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கருத்தில் கொண்டு செயல்படவும் வேண்டுகிறோம்.

வழி பிறக்கும்
திரைப்படம் பார்க்க வரும் அனைவரின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப, இந்த பொங்கல் முதல், தமிழ் சினிமா மீண்டும் வீறு கொண்டு செயல்பட அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கம்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் எம். ராமசாமி, தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சருக்கும்
அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











