ஓராண்டா விஜயகாந்தை பார்க்க அனுமதி கேட்ட விஜய்.. அமைதியாக இருந்த கேப்டன் குடும்பம்.. வெளிவந்த உண்மை!

சென்னை: ஒரு வருடமாக விஜயகாந்தை பார்ப்பதற்கு குடும்பத்தினரிடம் தளபதி விஜய் அனுமதி கேட்டு காத்திருந்ததாக வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். இவர் விஜயின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. விஜய் சினிமாவிற்குள் வந்த போது, இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, விஜயகாந்த் தனக்கு வந்த வாய்ப்பை விஜயிற்கு கொடுத்ததாக சினிமா வட்டாரங்களில் ஒரு கதை இருக்கின்றது.

Film journalist Anthanan Interview on Vijayakanth for YouTube channel

விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படம் விஜயகாந்தின் சினிமா வாழ்க்கைக்கு நல்ல தொடக்கமாக இருந்ததால், அந்த நன்றியை மறக்காத விஜயகாந்த், செந்தூரப்பாண்டி படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று விஜய்யின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.

கண்கலங்கிய விஜய்: இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவையடுத்து சில மணி நேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டு அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்தனர். திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். கட்டுக்கடங்காத கூட்டம் இருந்த போதும், நடிகர் விஜய் கூட்டத்திற்கு இடையே விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கண்ணாடி பெட்டியின் மீது கை வைத்து கலங்கிய கண்ணுடன் மனைவி பிரேம லதா மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினார்.

அமைதியாக இருந்த கேப்டன் குடும்பம்: இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, கேப்டனின் தொண்டர்கள் கேப்டன் உடல்நிலை மோசமாக இருந்த போது வராத விஜய் இப்போது ஒப்புக்கு வந்து அஞ்சலி செலுத்துவது எந்த வகையில் நியாயம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நிகழ்ச்சிக்கு வருவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு தான், ஒரு நண்பரிடம் பேசினேன். அவர் சொன்ன தகவல் எனக்கே புதியதாக இருந்தது. தளபதி விஜய் விஜயகாந்தை நேரில் சென்று பார்ப்பதற்காக கிட்டத்தட்ட ஒரு வருடமாக முயற்சி செய்து வந்தாராம். ஆனால் விஜயகாந்த் தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லையாம். அதனால் தான் விஜய் அவரைப் பார்க்க முடியாமல் போனது என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X