LEO தயாரிப்பாளருக்கும் விஜய்சேதுபதிக்கும் சண்டை... உண்மையை புட்டு புட்டு வைத்த பிஸ்மி!

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய்சேதுபதி இணைய உள்ளதாக பரவி வரும் தகவலுக்கு சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி விளக்கம் கொடுத்துள்ளார்.

வாரிசு திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜூடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு லியோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில், திரிஷா, ஆர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன்,மிஸ்கின், பிரியா ஆனந்த், சாண்டி, மன்சூர் அலிகான், மேத்தியூ தாமஸ், மனோபாலா ஆகியோர் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர்.

காஷ்மீரில் படப்பிடிப்பு

காஷ்மீரில் படப்பிடிப்பு

லியோ திரைப்படம் ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 18ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளால், லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிப்ரவரி 1ந் தேதி படக்குழு காஷ்மீர் சென்ற நிலையில், திரிஷா மட்டும் சொந்த காரணத்திற்காக சென்னை வந்தார். ஆனால், அவர் படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து திரிஷா காஷ்மீரில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

லியோ படத்தில் விஜய்சேதுபதியா?

லியோ படத்தில் விஜய்சேதுபதியா?

அதே போல லியோ படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவரான ரத்ன குமார், விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி நடித்த சந்தானம் கதாபாத்திரத்தை சித்தரிக்கும் வகையில், சந்தானம் அணிந்த கண்ணாடியை ஒரு கையில் வைத்து இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து, இறப்பை சொல்லாதே என பதிவிட்டு இருந்தார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இதைப்பார்த்த ரசிகர்கள் லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். அதைத்தான் ரத்னகுமார் சூசகமாக கூறியுள்ளார் என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மாஸ்டர், விக்ரம் அடுத்து லியோ படத்திலும் விஜய்சேதுபதியை காண ஆவலாக இருக்கிறோம் என்று பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

கண்டிப்பா இல்லை

கண்டிப்பா இல்லை

இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி, பில்மிபீட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், லியோ படத்தில் பணியாற்றும் எனது நண்பர் ஒருவரிடம் விஜய்சேதுபதி இப்படத்தில் நடிக்கிறாரா என்று கேட்டேன். அவர் கண்டிப்பா இல்லை என்று கூறினார். ஆனால், ரத்னகுமார் அதே படத்தில் வேலை செய்கிறார். அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர் என்பதால், இவர் சொல்லும் தகவலை வதந்தி என்று ஒதுக்கிவிட முடியாது.

விஜய்சேதுபதிக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டை

விஜய்சேதுபதிக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டை

ஒருவேளை விஜய்சேதுபதி இந்தபடத்தில் நடிக்கிறார் என்றால் லியோ படத்தின் தயாரிப்பாளர் அதற்கு உடன்பட வேண்டும். நான் கேள்விபட்ட தகவலின் படி, விஜய்சேதுபதிக்கும் தயாரிப்பாளர் லலித்திற்கும் அண்மையில் மிகப்பெரிய சண்டை நடந்துள்ளது. அதாவது விஜய்சேதுபதி, லலித்தை பற்றி வேறு ஒரு இயக்குநரிடம் கருத்தை சொல்ல, அந்த தகவல் லலித்தின் காதுக்கு வந்ததால், கடுப்பான லலித், விஜய்சேதுபதியின் அலுவலகத்திற்கே நேரடியாக சென்று விஜய்சேதுபதியிடம் சண்டை போட்டு, இரண்டு படத்திற்கு கொடுத்த அட்வான்சை கொடு என்று கேட்டுவாங்கி உள்ளார்.

வாய்ப்பே இல்லை

அப்படி இருவருக்கு இடையேயும் மோதல், மனக்கசப்பு இருக்கும் போது விஜய்சேதுபதி நிச்சயம் லியோ படத்தில் நடிக்க வாய்ப்பே இல்லை என்று தான் எனக்கு தெரிகிறது. இருந்தாலும், படம் குறித்து ஏதாவது பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே ரத்னகுமார் இப்படி செய்கிறாரா என்று தெரியவில்லை என்றார் பிஸ்மி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X