Viduthalai 2 : விடுதலை 2 இப்போதைக்கு வராது... குண்டை தூக்கிப்போட்ட பிஸ்மி!

சென்னை : விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போதைக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என்று சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி பேட்டியில் கூறியுள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் விடுதலை படத்தின் முதல் பாகம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.

விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

விடுதலை : ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் சூரி முதன்முறையாக விடுதலைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து ஆளே மாறிவிட்டார். இசைஞானி இளையராஜா இசையில் படத்தில் இடம் பெற்ற மூன்று பாடல்களும் இணையத்தில் டிரெண்டாகி உள்ளது. கடந்த மாதம் படம் வெளியான நிலையில், தற்போது வரை வசூலை அள்ளி வருகிறது.

film journalist bismi said that viduthalai part 2 will not be released for now

பிஸ்மி பேட்டி: இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி, பில்மிபீட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், விடுதலை பாகம் இரண்டு விரைவில் வெளியாகும் என்று கூறி வந்த நிலையில் படம் டிசம்பர் மாதத்திற்கு பின் வெளியாகும் என்ற தகவல் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கேள்விக்கு பதில் அளித்த பிஸ்மி, விடுதலை இரண்டாம் பாகத்தை பொறுத்தவரையில் இன்னும் இருவது நாள் படப்பிடிப்பு மட்டுமே எடுக்க வேண்டி இருப்பதாக வெற்றிமாறன் கூறியிருந்தார்.

20 நாள் படப்பிடிப்பு தான் : இந்த படப்பிடிப்பும் அடுத்த மாதம் அதாவது மே மாதம் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. வெற்றிமாறன் ஐந்து நாள் படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்லிவிட்டு 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தக்கூடிய இயக்குநர். இதனால் , வெற்றிமாறன் சொன்னபடி 20 நாட்களில், இந்த படத்தின் படப்பிடிப்பை முடிந்து விடுவாரா என்று தெரியவில்லை. ஏற்கனவே விடுதலை இரண்டாம் பாகத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இந்த 20 நாள் படப்பிடிப்புக்கூட பேச்வொர்க் தான்.

film journalist bismi said that viduthalai part 2 will not be released for now

இப்போதைக்கு ரிலீஸ் இல்லை : இந்த படப்பிடிப்பில் மனதிற்கு திருப்தி இல்லாத சில காட்சிகளை மீண்டும் எடுக்க திட்டமிட்டுள்ளார். ஒருவேலை அதிலும் அவர் திருப்தி அடைய வில்லை என்றால் படப்பிடிப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரு படத்தை எடுத்துமுடித்துவிட்டாலும், சாதகமான தேதியில் வெளியிட்டால் தான் படம் லாபத்தை கொடுக்கும் என்பதால், இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் வெற்றிமாறன் விடுதலை இரண்டாம் பாகத்தை வெளியீடுவார் எனவிடுதலை 2 இப்போதைக்கு வராது என்று பிஸ்மி பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X