twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரசிகர்கள் தியேட்டருக்கு வரணும்னா.. மாஸ்டர் மாதிரி ஒரு படம் வரணும்.. பிரபல பாலிவுட் இயக்குநர் பரபர!

    |

    சென்னை: ரசிகர்களை தியேட்டருக்கு வரச்செய்ய மாஸ்டர் மாதிரி ஒரு திரைப்படம் பாலிவுட்டில் ரிலீஸ் ஆக வேண்டும் என இந்தி இயக்குநரான அனுராக் பாசு கூறியுள்ளார்.

    மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜயை வைத்து இயக்கிய படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆனது.

     மாஸ்டர் படம்

    மாஸ்டர் படம்

    திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் மாஸ்டர் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனால் திரையரங்குகளில் ரசிகர்கள். படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால் சில திரையரங்குகளில் அனுமதியை மீறி 100 சதவீத இருக்கைகள் நிரம்பின.

     அனுராக் பாசு

    அனுராக் பாசு

    இதனால் தமிழகத்தில் மட்டும் 140 கோடிக்கு மேல் படம் வசூலை குவித்தாக தகவல் வெளியானது. இந்நிலையில் பாலிவுட்டில் மர்டர், கேங்ஸ்டர், பர்ஃபி, கைட்ஸ் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் பாசு மாஸ்டர் படம் குறித்து பேசியுள்ளார்.

     பாலிவுட்டிலும் வர வேண்டும்

    பாலிவுட்டிலும் வர வேண்டும்

    அதாவது ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அனுராக் பாசு, தென்னிந்தியாவில் விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் ரசிகர்களை தியேட்டருக்கு வரச் செய்த ஒரு படம். அப்படி ஒரு படம் பாலிவுட்டிலும் வர வேண்டும்.

     லூடோ திரைப்படம்

    லூடோ திரைப்படம்

    படைப்பாற்றல் சுதந்திரத்துக்கும், அதை தவறாக பயன்படுத்துவதற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருக்கிறது. ஓடிடி தளங்களிலும் அது இருக்கிறது என்று கூறிள்ளார். அனுராக் பாசு இயக்கிய 'லூடோ' திரைப்படம் சமீபத்த்தில் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director Anurag Basu praising Master movie. He said Vijay starrer 'Master' is a movie that has brought fans to the theater. Such a film should come in Bollywood too.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X