நண்பர் மகள், மைனர், பெண் இயக்குனருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபலம்
Recommended Video

மும்பை: நிதி ஆலோசகர் சுஹேல் சேத் மீது பெண் இயக்குனர் உள்பட 4 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
நிதி ஆலோசகரான சுஹேல் சேத் பல பிரபலங்களுக்கு பொது ஆலோசகராக உள்ளார். டிவி விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுவார். அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதில் ஒரு பெண் மைனராக இருந்தபோது சேத் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இயக்குநர்
பெண் இயக்குனரான நடாஷ்கா ரத்தோர் சேத் பற்றி கூறியவதாவது, கடந்த ஆண்டு குர்காவ்னில் அவரின் வீட்டில் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். 55 வயதாகும் அவர் நான் தடுத்தும் அவர் நாக்கை என் வாயில் விட்டார். அவரின் தலையில் அடித்து ஒழுங்காக இருங்கள் என்று கூறியும் கேட்கவில்லை. என் குர்தாவுக்குள் கையை விட்டு என் மார்பை பிடித்தார். அவரின் கையில் அடித்து தட்டிவிட்டதும் நினைவில் உள்ளது என்றார்.

பாஸ்
நான் சுஹேல் சேத்தை ஒரு பார்ட்டியில் சந்தித்தேன். அவரை பார்த்து ஒரு ஹாய் சொல்லிவிட்டு அவரை ட்வீட் செய்ய வைக்குமாறு என் பாஸ் கூறியதால் அந்த பார்ட்டிக்கு சென்றேன். அவர் என்னை ஐஸ் கிரீம் சாப்பிட வருமாறு கூறினார். நான் இரண்டு முறை மறுத்தேன். அவர் வலியுறுத்தியதால் அவரின் காரில் ஏறினேன். அவர் ஐஸ் கிரீம் கடைக்கு அழைத்துச் செல்லாமல் அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் என்று நடாஷ்ஜா தெரிவித்துள்ளார்.

மந்தாகினி
2011ம் ஆண்டு கோவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின்போது சேத் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பத்திரிகையாளரான மந்தாகினி கெஹ்லாட்(31) தெரிவித்துள்ளார். நான் அந்த நிகழ்ச்சியில் இருந்து கிளம்பியபோது சேத் என் அருகில் வந்து என் உதட்டில் முத்தம் கொடுத்தார். மேலும் தனது நாக்கை என் வாயில் விட்டார். நான் அதிர்ச்சி அடைந்து சுஹேல் நீங்கள் இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்றேன். ஆனால் சுஹேலும், அங்கிருந்தவர்களும் என்னை பார்த்து சிரித்தார்கள் என்றார் மந்தாகினி.

வேலை
நான் என் வேலையில் முன்னேற விரும்பிய நேரம். சுஹேலோ அதிகாரம் படைத்தவராக இருந்தார். அதனால் அவர் மீது போலீசில் புகார் அளிக்கவில்லை என்கிறார் மந்தாகினி. மும்பையை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு 17 வயது இருக்கும்போது அவருக்கு அசிங்கமாக மெசேஜ் அனுப்பியிருக்கிறார் சேத். அந்த பெண் தான் சேத் மீது முதன் முதலாக புகார் தெரிவித்தார்.

அதிர்ச்சி
எனக்கு 17 வயது இருந்தபோது அவர் என் பிறந்தநாளை கொண்டாட அவர் அறைக்கு வரச் சொன்னார். மேலும் மெசேஜில் முத்தம் வேறு கொடுத்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் என் அம்மாவிடம் கூறினேன். அவர் சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறுமாறு கூறினார். நானும் அப்படியே செய்தேன் என்கிறார் அந்த இளம் பெண்.

நண்பர்
மும்பையை சேர்ந்த 31 வயது பெண் கூறியதாவது, சேத்துக்கு என் அப்பாவை நன்கு தெரியும். என் தந்தை தற்போது உயிருடன் இல்லை. அவர் உயிருடன் இருந்தபோது நாங்கள் டெல்லி சென்றபோது சேத்தை பார்த்துள்ளோம். அந்த பழக்கத்தில் கடந்த ஆண்டு அவரை பிரபல ஹோட்டலில் பார்த்தபோது ஹாய் செல்ல சென்றேன். அவரோ பேச்சு வாக்கில் செக்ஸ், ஆன்லைன் டேட்டிங் பற்றி பேசினார். என் இடுப்பில் கையை போட்டார். பின்னர் என்னை தன் அறைக்கு வருமாறு அழைத்தார். ஆனால் நான் செல்லவில்லை என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











