சூர்யா 40 லேட்டஸ்ட் அப்டேட்...விசிலடித்து வரவேற்ற ரசிகர்கள்
சென்னை : பிஸியாக பல படங்களில் நடித்து வரும் சூர்யா கடைசியாக சுதா கொங்கரா இயக்கிய சூரரை போற்று படத்தில் நடித்தார். இந்த படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டு, பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, பாராட்டுக்களை குவித்தது.
தற்போது சூர்யா, டி.ஜெ.ஞானவேல் இயக்கும் கூட்டத்தில் ஒருவன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். சூர்யா வித்தியாசமான கேரக்டரில் நடிக்கு இந்த படத்தை சூர்யாவின் 2 டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

வழக்கறிஞராக மாறிய சூர்யா
இந்த படத்தில் முதல் முறையாக சூர்யா, வழக்கறிஞர் ரோலில் நடிக்கிறார். அதுவும் எஸ்டேட் தொழிலாளர்களுக்காக போராடும் வக்கீலாக நடிக்கிறார். இது தொடர்பான ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்கள் சமீபத்தில் வெளியாகி, வைரலாக்கப்பட்டது.

சூர்யா 40 ஷுட்டிங் எப்போ
சூரரை போற்றி படத்திற்கு பிறகு, கர்ணன் படத்தின் நாயகி ரஜிஷாவுடன் சூர்யா 40 படத்திலும் இரண்டாவது முறையாக ஜோடியாக நடிக்க உள்ளார் சூர்யா. பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தின் ஷுட்டிங்கில் ஜுலை 12 ம் தேதி காரைக்குடியில் துவங்க உள்ளதாம். இதில் சூர்யா பங்கேற்க உள்ளார்.

மாஸ் காட்டும் சன் பிக்சர்ஸ்
இதைத் தொடர்ந்து சூர்யாவின் பிறந்தநாளான ஜுலை 23 அன்று, இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சமீபத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட்லுக்கை அவர் பிறந்த நாளன்று வெளியிட்டு அசத்தியது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

வரிசையாக இத்தனை படங்களா
இந்த படங்களைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார். அதுமட்டுமல்ல சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் மற்றொரு படம், நெட்ஃபிளிக்சிற்காக கவுதம் மேனன் இயக்கும் நவரசா படத்திலும் நடிக்க உள்ளார்.

கவுதம் மேனனுடன் ஹிட் கூட்டணி
இதற்கு முன் சூர்யா நடித்து மெகாஹிட் ஆன காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களை கவுதம் மேனன் தான் இயக்கி இருந்தார். தற்போது சிம்பு நடிக்கும் நதிகளில் நீராடும் சூரியன் படத்தை தொடர்ந்து சூர்யாவின் நவரசாவையும் கவுதம் மேனன் இயக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











