எம்.எஸ்.டோணி படத்தின் பர்ஸ்ட் லுக்… குவியும் பாராட்டு - 2015ல் படம் ரிலீஸ்!

By Mayura Akilan

எம்.எஸ்.டோணி - தி அன் டோல்டு ஸ்டோரி படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. டோணியின் மனைவி சாக்ஷி இதனை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். டோணி படம் போஸ்டர் வெளியானது முதல் ரசிகர்கள் பாராட்டினை அள்ளி குவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கூல் கேப்டன் டோணி. விக்கெட் கீப்பராக அணியில் நுழைந்து இன்றைக்கு வெற்றிகரமான கேப்டனாக இருக்கிறார் மகேந்திரசிங் டோணி.

டோணியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ஒன்று "எம்.எஸ்.டோணி" என்ற பெயரில் பாலிவுட்டில் தயாரிக்கப்பட உள்ளது. பிரபல இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளிவரவுள்ள இந்த திரைப்படத்தில் சுஹாந்த் சிங் ராஜ்புத், டோணி வேடத்தில் நடிக்க உள்ளார்.

மிரட்டல் பர்ஸ்ட் லுக்

மிரட்டல் பர்ஸ்ட் லுக்

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. பர்ஸ்ட் லுக் வெளியான சில நிமிடங்களில் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்து, தோனியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சுசாந்த் சிங் ராஜ்புத்

சுசாந்த் சிங் ராஜ்புத்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோணியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார். டிவி சீரியல் நடிகராக இருந்து பாலிவுட் திரை உலகில் நுழைந்த இவர், பி.கே உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

பிசிசிஐ சம்மதம்

பிசிசிஐ சம்மதம்

கேப்டன் டோணியின் வாழ்க்கையை படமாக்க இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது, இதனால் இந்தப்படம் ஆரம்பிக்க தாமதமான நிலையில், தற்போது பிசிசிஐ, டோணியின வாழ்க்கை திரைப்படத்திற்கு சம்மதம் வழங்கியுள்ளது.

விளையாடினால் போதும்

விளையாடினால் போதும்

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த உறுப்பினரான ராஜீவ் சுக்லா கூறுகையில், கிட்டத்தட்ட எல்லா கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் தவிர்த்து விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் நடித்து வருகின்றனர். அதை நாங்கள் கண்டு கொள்வதில்லை, எங்களுக்கு சம்பந்தப்பட்ட வீரர் போட்டியின் போது சரியாக விளையாட வேண்டும், அதைத்தான் நாங்கள் பார்ப்போம், ஆகையால் இதுபோன்ற விஷயங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று கூறியுள்ளார்.

சுறுசுறுப்பு

சுறுசுறுப்பு

பிசிசிஐ., தரப்பில் இருந்து இப்படியொரு அறிவிப்பு வந்ததையடுத்து படத்தை எடுப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். இன்றைய தினம் பர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பினை பெற்றுள்ளது.

தோனியின் ரசிகர்கள்

தோனியின் ரசிகர்கள்

இந்த திரைப்படத்தைக் காண டோணியின் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவருமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

40 கோடி கேட்ட தோனி

40 கோடி கேட்ட தோனி

இந்த படத்திற்காக தோனி 40 கோடி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2015ஆம் ஆண்டு டோணி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படி எனில் அடுத்த ஆண்டு தோனி கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விளையாட்டு வீரர்கள் வாழ்க்கை

விளையாட்டு வீரர்கள் வாழ்க்கை

மில்கா சிங்கின் 'பாஹ் மில்கே பாஹ்' மற்றும் 'மேரி கோம்' படங்களை அடுத்து மற்றொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X