பாலு மகேந்திராவுக்கு ரஹ்மான், குஷ்பு, அமலா பால் ட்விட்டரில் அஞ்சலி

By Shankar

சென்னை: மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற ஒளிப்பதிவாளரும், தலைசிறந்த இயக்குநருமான பாலுமகேந்திரா நேற்று மாரடைப்பால் காலமானார்.

அவரது மறைவிற்கு கலைத்துறையினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் நடிகைகள் அமலா பால் மற்றும் நடிகை குஷ்பு டிவிட்டரில் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

பாலுமகேந்திரா மறைவு குறித்து நடிகை குஷ்பு சுந்தர் கூறியதாவது:

பாலுமகேந்திரா சார் மறைந்தாலும் அவர் கொடுத்த திரைப்படங்கள் நம்மை விட்டு நீங்காத இடத்தில் உள்ளன. அவரது ஒளிப்பதிவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளித்தவர். அவர் மறைந்தாலும் நாம் வருத்தப்படகூடாது. அவர் இயக்கிய திரைப்படங்கள் நம் மனதில் என்றும் நிலைத்து நிற்க கூடியதாக உள்ளது.

நடிகை அமலாபால்

நடிகை அமலாபால்

"பாலுமகேந்திரா சார் மறைந்தது நமக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. இதுபோன்ற படைப்பாளியை மீண்டும் திரையுலகம் பார்ப்பது மிகவும் கடினம்", என்று கூறியுள்ளார்.

ராதிகா சரத்குமார்

ராதிகா சரத்குமார்

"பாலு மகேந்திரா சார் மறைவு இந்த திரைத் துறைக்கு உண்மையிலேயே பேரிழப்பாகும். அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்."

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்:

"பாலுமகேந்திரா சார் திரைப்படங்களில் எழுச்சியூட்டும் பாடல்களை தந்துள்ளார். அது காலத்தாலும் மறையாது. அவரது பாடல்கள் என்றும் திரை உலகில் ஒரு மைல்கல்லாக இருக்கும். உங்களது ஆதமா கடவுளிடம் சாந்தி அடையட்டும்!"

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X