சல்மான் கானை சிக்க வைக்க போலி துப்பாக்கிச்சூடு நடத்திய தயாரிப்பாளர் கைது
மும்பை: நடிகர் சல்மான் கானை போலீசில் சிக்க வைக்க போலி துப்பாக்கிச்சூடு நடத்திய பட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஹர்தேவ் சிங்(47). அவர் மும்பையில் பட தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். ஹர்தேவ் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
தான் காரில் அதிகாலையில் கடைக்கு சென்று கொண்டிருக்கையில் பைக்கில் இரண்டு பேர் தன்னை பின்தொடர்ந்து வந்தனர் என்றும், அவர்கள் தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், அந்த குண்டுகள் அவர் மீது படாமல் கார் மீது பட்டதாகவும் அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.

சல்மான்
தன்னை கொல்ல நடந்த சதி முயற்சிக்கு பின்னால் நடிகர் சல்மான் கானும், அவரது மேனேஜர் ரேஷ்மா ஷெட்டியும் உள்ளதாக தான் சந்தேகப்படுவதாக ஹர்தேவ் போலீசில் தெரிவித்தார்.

பாடல்
ஹர்தேவின் மனைவி ஜஸ்மீத் சேத்தியும், அவரது மகளும் தான் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சல்மானை தங்கள் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடக் கோரி ரேஷ்மாவை அவர்கள் சந்தித்துள்ளனர். ரேஷ்மா பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளார்.

ஜஸ்மீத்
ரேஷ்மா பெரிய தொகையை கேட்டதால் சல்மானை நேரில் சந்திக்க ஜஸ்மீத் அவரது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு பிரச்சனை செய்தார்.

போலி துப்பாக்கிச்சூடு
சல்மானை போலீசில் சிக்க வைக்க ஹர்தேவ் தனது உறவினர் தேவேந்தருடன்(44) சேர்ந்து போலியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதை போலீசார் கண்டுபிடித்து அவர்கள் இருவரையும் நேற்று கைது செய்தனர்.

நஷ்டம்
சல்மானுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாகவும், மேலும் பல்வேறு வழக்குகளில் தனது குடும்பம் சிக்கியதாகவும் அதனால் தான் பழிவாங்க போலி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் ஹர்தேவ் விசாரணையில் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











