தொழிலில் பயங்கர நஷ்டம்... பிரபல தயாரிப்பாளர் தூக்குப் போட்டுத் தற்கொலை... சினிமாத்துறை அதிர்ச்சி

By

பெங்களூரு: பிரபல சினிமா தயாரிப்பாளர், ஓட்டலில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் கபாலி மோகன் என்கிற வி.கே.மோகன். பல படங்களை விநியோகமும் செய்துள்ளார்.

வேறு சில தொழில்களையும் செய்து வந்த இவர், சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தும் இருக்கிறார். படங்களுக்கு பைனான்ஸும் செய்து வந்தார்.

ஓட்டல் அறையில்

ஓட்டல் அறையில்

இவருக்கு பெங்களூரு அருகில் உள்ள பீன்யா என்ற பகுதியில் ஓட்டல் ஒன்று உள்ளது. அதன் இரண்டாவது மாடியில் உள்ள அறை எண் 108 ல், இவர் கடந்த இரண்டு மூன்று நாட்களாக தங்கி இருந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு ஓட்டலில் வேலை பார்த்த மஞ்சுநாத் என்பவர், அவருடன் பேசியுள்ளார். அதற்கு பிறகு அவர் வீட்டுக்குச் சென்று விட்டார்.

தூக்குப் போட்டு

தூக்குப் போட்டு

இந்நிலையில், நேற்று காலை அதிக நேரம் வரை, அவர் அறை பூட்டிக்கிடந்தது. இதைக் கண்டு சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள், கதவைத் தட்டினார். திறக்கவில்லை. தொடர்ந்து தட்டியும் திறக்காததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மின் விசிறியில் தூக்குப் போட்டு அவர் தற்கொலை செய்திருந்தார்.

செல்பி வீடியோ

செல்பி வீடியோ

இதனால் ஊழியர்கள் ஷாக் ஆயினர். பின்னர் அவர் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறைந்த கபாலி மோகன், பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் குடும்பத்துக்கு நெருங்கியவர். தற்கொலைக்கு முன் செல்பி வீடியோவில், ஏன் இந்த முடிவை எடுத்தேன் என்று கபாலி மோகன் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை போலீசார் பார்த்தனர்.

மிகப்பெரிய நஷ்டம்

மிகப்பெரிய நஷ்டம்

பீன்யா பகுதியில் புதிய பேருந்து நிலையத்தில் கடைகளை வாடகைக்கு விடுவதற்கான ஏலத்தை இவர் எடுத்திருந்தார். அந்த பேருந்து நிலையம் ஊரைவிட்டு தள்ளி இருந்ததால், மக்கள் பயன்பாட்டுக்கு அது வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மிகப்பெரிய நஷ்டம் அடைந்ததாகக் கூறியுள்ள அவர், வங்கி கடனை கட்ட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வருமான வரி

வருமான வரி

கடந்த சில வருடங்களுக்கு முன் இவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி பணத்தைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த முடிவை அவர் எடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஓட்டல் அறையில் தூக்குப் போட்டு தயாரிப்பாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது, கன்னட சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X