42 லிட்டர் தாய்ப்பால்.. தானம் கொடுத்த டாப்ஸி பட தயாரிப்பாளர்.. அப்படி பாராட்டும் நெட்டிசன்ஸ்!
மும்பை: திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் 42 லிட்டர் தாய்ப்பாலை தானமாக அளித்திருப்பதை பலர் பாராட்டியுள்ளனர்.
இந்தியில் கடந்த அண்டு வெளியாகி கவனிக்கப்பட்ட படம், சாந்த் கி ஆங். துஷார் ஹிரானந்தனி இயக்கி இருந்தார்.
இதில் டாப்ஸி, பூமி பட்னேகர், பிரகாஷ் ஷா, பவன் சோப்ரா உள்பட பலர் நடித்திருந்தனர்.

தயாரிப்பாளர் நிதி பர்மர்
இந்தப் படத்தை அனுராக் காஷ்யப், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தவர் நிதி பர்மர். இவர், இந்த கொரோனா காலகட்டத்தில், தாய்ப்பால் தானம் செய்திருக்கிறார். 42 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

தாய்ப்பாலம் தானம்
தாய்ப்பால் தானம் பற்றிய விழிப்புணர்வு கடந்த சில வருடங்களாக அதிகமாகி வருகிறது. தமிழக அரசு கூட கடந்த சில வருடங்களுக்கு முன் ஹ்யூமன் மில்க் பேங்க் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் பல தாய்மார்கள், தாய்ப்பாலம் தானம் செய்து வருகின்றனர். இதன் மூலம் பலர் பயன்பெற்று வருகின்றனர்.

அதிகமாக சுரக்கும்
இந்நிலையில் தயாரிப்பாளர் நிதி பர்மருக்கு (வயது 41) கடந்த பிப்ரவரி மாதம் ஆண்குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்குப் போக அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை வீணாக்க விரும்பாத, நிதி பர்மர், என்ன செய்யலாம் என்று மருத்துவர் ஒருவரிடம் கேட்டுள்ளார். அவர் தாய்ப்பால் தானம் பற்றி கூறியுள்ளார்.

சுமார் 42 லிட்டர்
அதோடு, மும்பை கர் பகுதியில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு தானம் செய்யுமாறு பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து அவர் தானம் செய்ததாகக் கூறியுள்ளார். மார்ச் மற்றும் மே மாதங்களில் சுமார் 42 லிட்டர் தாய்ப்பாலை அவர் தானம் செய்துள்ளார். இதன் மூலம் பல குழந்தைகளை அவர் காப்பாற்றியுள்ளார். இதையடுத்து சமூக வலைதளங்களில் அவரை நெட்டிசன்ஸ் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











