ஒரே ரூமில் அந்த நடிகையுடன்தான் தங்குவார்.. நடிகர் குறித்து புட்டு புட்டு வைத்த தயாரிப்பாளர்!
Recommended Video
சென்னை: பிரபல நடிகரான ஜெய் குறித்து அதிர வைக்கும் தகவல்களை கூறியிருக்கிறார் நடிகரும், தயாரிப்பாளருமான போஸ்டர் நந்தகுமார்.
நடிகர் ஜெய் 2002ஆம் ஆண்டு வெளியான பகவதி படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து சென்னை 28 படத்தில் லீடிங் ரோலில் நடித்தார்.
தொடர்ந்து சுப்பிரமணியபுரம், வாமணன், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்மாரி படத்திலும் நடித்து வருகிறார் ஜெய்.

அடிக்கடி சர்ச்சை
இந்நிலையில் நடிகர் ஜெய்க்கும் நடிகை அஞ்சலிக்கும் இடையில் காதல் இருப்பதாக அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதோடு குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்துவதாக ஜெய்யும் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

குடைச்சல்கள்
இந்நிலையில் நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலியை வைத்து பலூன் என்ற படத்தை தயாரித்த போஸ்டர் நந்தகுமார் படப்பின் போது ஜெய் கொடுத்த குடைச்சல்கள் குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

எப்படி பெயர் சொல்லலாம்
ஊடகம் ஒன்றிற்கு போஸ்டர் நந்தகுமார் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், படப்பிடிப்பின் போது, அஞ்சலியை படத்தின் இயக்குநரான சினிஷ் ஸ்ரீதரன் பெயர் சொல்லி அழைத்துவிட்டாராம். இதனால் கடுப்பான ஜெய், எப்படி பெயர் சொல்லி அழைக்கலாம் என பெரும் பிரச்சனையாக்கிவிட்டாராம்.

அஞ்சலியை அழைத்துக்கொண்டு
அதோடு மட்டுமின்றி எந்த தகவலும் தெரிவிக்காமல் மறுநாள் ஷுட்டிங்கில் பங்கேற்காமல் அஞ்சலியை அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்று விட்டாராம். இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாம்.

நடிகையுடன் ஒரே ரூமில்
மேலும் 5 ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவேன் என்று கூறிய ஜெய், தனக்கு புக்செய்யப்பட்ட ரூமில் தங்காமல் எப்போதும் அஞ்சலியுடன் அவரது ரூமில்தான் தங்கியிருப்பார் என்றும் மற்றொரு ரூமை கேன்சல் செய்துவிடலாமா என்று கேட்டால் ஒத்துக்கொள்ளாமல் வெட்டி செலவு வைப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

எடுத்துவிட்ட தயாரிப்பாளர்
பலூன் படத்தின் போது நடிகர் ஜெய் தம்மை படாதபாடு படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அஞ்சலியும் ஜெய்யும் தங்களுக்குள் உள்ள காதலை மறுத்து வந்த நிலையில், இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்த தகவலை எடுத்து விட்டுள்ளார் தயாரிப்பாளர் போஸ்டர் நந்தகுமார்.


Click it and Unblock the Notifications











