ஜாமீன் கேட்ட தயாரிப்பாளர் ரவீந்தருக்கு நிபந்தனை ஜாமீன்.. வங்கி கணக்கில் பல பகீர் தகவல்!

சென்னை: மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உள்ளது.

நட்புனா என்னனு தெரியுமா,முருங்கைக்காய் போன்ற படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்.

இவர் கடந்த ஆண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். யாருக்கும் தெரியாமல் இவர்களின் திருமணம் திடீரென நடந்ததால்,சோஷியல் மீடியாவில் இது மிகப்பெரிய அளவில் பிரபலமானது.

film Producer ravindar chandrasekaran gets conditional bail in cheating case

திடீர் கைது: இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்திர் சந்திரசேகர், திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய சொல்லி பாலாஜி என்பவரிடம் இருந்து ரூ.16 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

ரவீந்தர் சந்திரசேகர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கலை நீதிபதி மறுப்பு தெரிவித்த நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி ரவீந்தர் சந்திரசேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

முற்றிலும் பொய்: அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்தர் தரப்பில் புகார்தாரருக்கு ரூ.2 கோடி திரும்ப வழங்கப்பட்டுவிட்டது என்று கூறினார்கள்.ஆனால் புகார் அளித்த பாலாஜி இந்த தகவல் முற்றிலும் பொய் என்றும் ரவீந்தர் அப்படி எதுவும் தரவில்லை என்று பதில் அளித்தார் இது அவருக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியதை அடுத்து வழக்கு அக்டோபர் 6ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வங்கி கணக்கில் பல பகீர் தகவல்: இதையடுத்து, ரவீந்திரனின் ஜாமீன் மனு இன்று நீதிபதிகள் சிவி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரனின் வங்கிக்கணக்கை ஆராய்ந்ததில் பல வங்கி பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. ஆனால் அவை அனைத்தும், இந்த வழக்கில் தொடர்புடையதா என தெரியவில்லை என கூறப்பட்டது.

நிபந்தனை ஜாமீன்: இதையடுத்து இந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தினால் மட்டுமே இது குறித்த முழு விவரம் தெரியவரும் என குறிப்பிட்ட நீதிபதி, இரண்டு வாரங்களில் ரூ.5 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை ரவீந்தர் சந்திரசேகர் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X