twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாழ்வை மாற்றிய கொடூர கொரோனா வைரஸ்.. பிரியாணி வியாபாரியாக மாறிய பிரபல சினிமா பட தயாரிப்பாளர்!

    By
    |

    கொச்சி: கொரோனா கொடுமை காரணமாக சினிமா தயாரிப்பாளரின் வாழ்க்கை மாறியதால் அவர் பிரியாணி விற்று வருகிறார்.

    கொரோனா வைரஸால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.

    இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

    6 மாதமாக கோவிட்19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அட்மிட் 6 மாதமாக கோவிட்19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அட்மிட்

    சம்பள குறைப்பு

    சம்பள குறைப்பு

    பலர் வேலை இழந்திருக்கிறார்கள். வேலையில் இருப்பவர்கள் சம்பள குறைப்பை சந்திக்கிறார்கள். பலர் கையிருப்பை கரைத்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என காத்திருக்கிறார்கள். வாழ்வைப் புதிதாகத் தொடங்குவது போல, தொடங்கி இருக்கிறார்கள், பலர். நிலைமை சுமூகமாக இன்னும் சில மாதங்கள் ஆகலாம். பலர் இன்னும் போராடி வருகின்றனர்.

    காய்கறி விற்பனை

    காய்கறி விற்பனை

    இதற்கிடையே சினிமா, சின்னத்திரையை நம்பி இருக்கும் சில இயக்குனர்கள், துணை நடிகர்கள் கடும் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். பலர் தங்கள் தொழிலை மாற்றி உள்ளனர். பல இந்தி நடிகர்கள், இயக்குனர்கள் காய்கறி விற்று வருகின்றனர். இதுபற்றிய செய்திகள் அவ்வப்போது வந்தவண்ணம் உள்ளன.

    ஜாபர் கஞ்சிரப்பள்ளி

    ஜாபர் கஞ்சிரப்பள்ளி

    இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் ஒருவரை கொரோனா பிரியாணி வியாபாரத்துக்கு மாற்றி இருக்கிறது. பிரபல மலையாள தயாரிப்பாளர், ஜாபர் கஞ்சிரப்பள்ளி. இவர் ஷகிலா நடித்த நீலக்குறிஞ்சு பூத்து உள்பட சுமார் 9 படங்களை தயாரித்தவர். கொரோனாவால் இவர் வாழ்க்கையும் மாறிவிட்டது.

    பிரியாணி பிசினஸ்

    பிரியாணி பிசினஸ்

    பொருளாதர நெருக்கடி அதிகரிக்க, சின்னதாக ஓட்டல் தொடங்கினார். அடுத்து பிரியாணி பிசினஸிலும் இறங்கிவிட்டார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: கொரோனாவால் சினிமா துறை மொத்தமாக பாதிப்பை சந்தித்துள்ளது. நான் உள்பட சினிமாவை சேர்ந்தவர்களில் பலருடைய வாழ்க்கை மாறிவிட்டது.

    திரைப்பட தொழிலாளர்

    திரைப்பட தொழிலாளர்

    இந்நிலையில் கேரளத் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு கூட்டமைப்பு உணவு வினியோகம் செய்யக் கூறியது. அதனால் ரூ.20-க்கும் குறைவான விலையில் உணவு தயாரித்து கொடுக்கத் தொடங்கினேன். அதன் தொடர்ச்சியாக பிரியாணி விற்று வருகிறேன். ஆரம்பத்தில் தடுமாற்றமாக இருந்தது. பிறகு வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.

    மூவாயிரம் பிரியாணி

    மூவாயிரம் பிரியாணி

    முதலில் ரூ.29-க்கு பிரியாணி விற்றேன். முதல் நாளில் மூவாயிரம் பிரியாணி விற்றது. இப்போது 49 ரூபாய்க்கு விற்று வருகிறேன். தினமும் மூவாயிரம் பிரியாணி தயாரித்து வருகிறேன். என் மனைவி எனக்கு உதவுகிறார். வேலைக்கு இரண்டு பேரை வைத்திருக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

    English summary
    Kerala Film producer Jafar Kanjirappally turns Biriyani seller to survive amid COVID crisis.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X