கொரோனா வைரஸ் பாதிப்பு.. பிரபல சினிமா தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!

By

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிரட்டி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இருந்தும் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சினிமா பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள்

இந்த வைரஸ், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவர் மகள் ஆரத்யா ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீட்டுக்குத் திரும்பினர்.

நடிகர் சஞ்சய் தத்

நடிகர் சஞ்சய் தத்

நடிகர் விஷால் அவர் தந்தை ஆகியோரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்தனர். இயக்குனர்கள் எஸ்.எஸ்.ராஜமவுலி, தேஜா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தி நடிகர் சஞ்சய் தத் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்.

தயாரிப்பாளர் சுவாமிநாதன்

தயாரிப்பாளர் சுவாமிநாதன்

இந்நிலையில் பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார். அகத்தியனின் கோகுலத்தில் சீதை, சுந்தர்.சியின், உள்ளம் கொள்ளை போகுதே, செல்வராகவனின் புதுப்பேட்டை, கமல்ஹாசனின் அன்பே சிவம் உட்பட பல படங்களை தயாரித்த நிறுவனம், லட்சுமி மூவி மேக்கர்ஸ். கடைசியாக இந்த நிறுவனம் ஜெயம் ரவி நடித்த சகலகலா வல்லவன் என்ற படத்தைத் தயாரித்திருந்தது.

கொரோனா அறிகுறி

கொரோனா அறிகுறி

இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர், வி.சுவாமிநாதன். சில படங்களில் காமெடி வேடங்களிலும் நடித்துள்ளார். வடிவேலுவுடன் இவர் நடித்த 'இது உங்கள் சொத்து' என்ற காமெடி மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டது. சென்னை சூளைமேட்டில் வசித்து வந்த சுவாமிநாதனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 67.

கும்கி அஸ்வின்

கும்கி அஸ்வின்

இது தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் மறைவை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த சுவாமிநாதனுக்கு லலிதா என்ற மனைவியும் மற்றும் அசோக், அஸ்வின் என்ற மகன்களும் உள்ளனர். அஸ்வின், கும்கி அஸ்வின் என்ற பெயரில் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Read more about: covid 19 கோவிட் 19
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X