தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு.. விஷால், ரஜினிகாந்த் வாக்களிக்க வரவில்லை!

By

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப் பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. நாளை முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்று விஷால் தலைவராக இருந்தார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால் பிரச்சனை ஏற்பட்டது.

உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

பின்னர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதற்கிடையே அரசு, சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமித்தது. இந்நிலையில் நீதிமன்றம் தேர்தல் அதிகாரியாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜெய்சந்திரனை அறிவித்து, தேர்தல் நடத்த உத்தரவிட்டது. கொரோனா காரணமாக சில முறை தேர்தல் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

அவகாசம் நீட்டிப்பு

அவகாசம் நீட்டிப்பு

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க, டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து தேர்தல் அதிகாரி எம்.ஜெய்சந்திரன் தேர்தல் தேதியை அறிவித்தார். அதன்படி தேர்தல் இன்று நடக்கிறது.

பி.எல்.தேனப்பன்

பி.எல்.தேனப்பன்

இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன், பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். துணைத் தலைவர்கள் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.

கலைப்புலி ஜி.சேகரன்

கலைப்புலி ஜி.சேகரன்

செயலாளர்கள் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோட்டபாடி ராஜேஷ், டி.மன்னன், ஆர்.ராதாகிருஷ்ணன், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ்.எஸ், கே.ராஜன், ஜே.சதீஷ்குமார் ஆகியோரும் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

இந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. தயாரிப்பாளர்கள் வாக்களித்து வருகின்றனர். மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தமுள்ள 1,303 வாக்குகளில் 1050 வாக்குகள் பதிவாயின. ரஜினிகாந்த், விஷால் உள்பட பலர் வாக்களிக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை நாளை காலையில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X