twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வால்பாறையில் சினிமா படப்பிடிப்புக்கு தடை - புலிகள் காப்பக இயக்குனர் தகவல்!

    |

    வால்பாறை: வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில், சினிமா படப்பிடிப்பு நடத்த கூடாது என்று ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் வரதராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய 2 வனச்சரகங்களிலும் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை காப்பக கள இயக்குனர் வரதராஜ் ஆய்வு செய்தார். நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    அதன்பிறகு அவர் கூறுகையில், "சின்னக் கல்லார் நீர்வீழ்ச்சிப் பகுதியில் பூங்கா, கழிப்பறை வசதி, கார் பார்க்கிங், நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட எந்த பகுதியிலும் சினிமா படப்பிடிப்பு நடத்த கூடாது. ஆனால் தனியார் எஸ்டேட் பகுதியில் சினிமா சூட்டிங் நடத்த மாவட்ட கலெக்டரிடம் முன் அனுமதி பெற வேண்டும். வால்பாறை வனப்பகுதியில் சினிமா சூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் வால்பாறை, டாப்ஸ்லிப், உடுமலை, பொள்ளாச்சி, அமராவதி ஆகிய 5 வனச்சரகங்களில் ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பில் அகழி வெட்டப்படும்," என்றார்.

    English summary
    Film shooting is banned in Valparai forest area and near to Anamalai tigers sanctuary, forest department said.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X