மங்கல்யான் வெற்றியைப் பாராட்டும் குஷ்பு, அமலாபால், ஸ்ரீதேவி
இந்திய விஞ்ஞானிகள் மங்கல்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியுள்ளனர். இந்த வரலாற்றுச் சாதனையை உலகமே பாராட்டுகிறது.
நடிகர், நடிகைகளும் ட்விட்டர், பேஸ்புக்கில் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அவர்களின் ட்விட்டர் பக்கங்களிலிருந்து...
நடிகை ஸ்ரீதேவி
'மங்கள்யான் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளை வாழ்த்துகிறேன்!'

நடிகை குஷ்பு
'மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை அடைந்திருப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையான விஷயம் ஆகும். இந்த வெற்றியை கொண்டாடும் இந்த தருணத்தில் இதற்கு பின்னால் இருந்த அத்தனை பேருக்கும் எனது வணக்கங்கள்!'

நடிகை அமலாபால்
'செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளுக்கு அனைத்து இந்தியர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கிறேன். மங்கள்யான் வெற்றிக்கு பின்னணியில் இருந்த அனைவருக்கும் வணக்கங்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன்
மங்கள்யான் வெற்றி இந்தியர்களை பெருமைபட வைத்துள்ளது. விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











