எடிசன் விருது - நேரில் வந்து வாக்களித்த நட்சத்திரங்கள்!

5-வது ஆண்டு எடிசன் விருதுகள் விழா வரும் பிப்ரவரி 12-ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடக்க உள்ளது.
இந்த விருதுகளுக்கான நட்சத்திரங்களை ஆன்லைன் வாக்கெடுப்பு முறையில் தேர்வு செய்கிறார்கள். தகுதியான படங்கள், நட்சத்திரங்களுக்கு மட்டுமே விருது தரவேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு.
அதேநேரம், ஆன்லைனில் வாக்களிக்க முடியாதவர்கள் வசதிக்காக, சென்னையில் வாக்குச் சீட்டு முறையையும் வைத்துள்ளார்கள். இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் இந்த வாக்குப் பெட்டிகளும், பக்கத்திலேயே வாக்குச் சீட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. இதில் குலுக்கல் முறை பரிசும் உண்டு.
நட்சத்திரங்களே நேரில் வந்து தங்களின் விருப்பமான கலைஞர்களுக்கு வாக்களிக்க நேற்று கோடம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகர்கள் பாண்டு, ஸ்ரீமன், மகத், முரளி, கரண் என பலரும் நேரில் வந்து வாக்களித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் விழா ஏற்பாட்டாளர் ஜெ செல்வகுமார், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications











