திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஜூன் 10ம் தேதி தேர்தல்

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஜூன் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் ஜூன் மாதம் 10ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தைப் போலவே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கமும் இயங்கி வருகிறது. இந்த சங்கத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் விசாரித்து முடிவெடுக்க முன்னாள் நீதிபதி கே.என்.பாஷாவை நீதிமன்றம் நியமித்தது.

 Film and television producers guild election on June 10

இந்நிலையில், கடந்த 7ம் தேதி இந்த சங்கத்தின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அக்கூட்டத்தின் முடிவில் வரும் ஜூன் 10ம் தேதி சென்னை அண்ணாநகர் கந்தசாமி கல்லூரியில் தங்களது சங்கத் தேர்தலை நடத்துவது என்றும், அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகளை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தேர்தல் ஆணையரும், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே.என்.பாஷா.

அப்போது அவர், "தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் ஜூன் மாதம் 10ம் தேதி நடைபெறும். இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 21ம் தேதி தொடங்கி 25 வரை நடைபெறும். 28ம் தேதி மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்ற உறுப்பினர்கள் புகைப்ப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்" எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறும் என ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா கூறியுள்ளார். சென்னை அண்ணாநகர் கந்தசாமி கல்லூரியில் தேர்தல் நடைபெறும் என்றும் அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தச் சங்கத்தில் 1536 வாக்களிக்கும் தகுதியுள்ள வாக்காளர்கள் உள்ளனர். இந்தத் தேர்தல் தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்காக நடைபெறுகிறது.

இதில், தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் மற்றும் பொருளாளர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி என இரண்டிற்கும் பொதுவாக செயல்படுவர். எனவே, ஒரு தலைவர் மற்றும் ஒரு பொருளாளர் பதவி மட்டுமே உள்ளது.

ஆனால், துணைத்தலைவர் மற்றும் செயலாளர் பதவி இரண்டும் தலா மூன்று உள்ளது. இதில் இரண்டு திரைப்படத்திற்கும், ஒன்று தொலைக்காட்சிக்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், செயற்குழு உறுப்பினர்கள் பதவி திரைப்படத்திற்கு 10ம், தொலைக்காட்சிக்கு 7ம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X