twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படப்பிடிப்புகள் முற்றிலும் நிறுத்தம்… அவதிக்குள்ளாகும் திரைப்பட தொழிலாளர்கள் !

    |

    சென்னை : கொரோனா நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளதால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் திரைப்பட தொழிலாளர்கள் மீண்டும் அவதிக்குள்ளாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ச்சோ ஸ்வீட்... குட்டி தேவதையை மனம்திறந்து பாராட்டிய இசைப்புயல் ச்சோ ஸ்வீட்... குட்டி தேவதையை மனம்திறந்து பாராட்டிய இசைப்புயல்

    நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நலிந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்.

    உயிரிழப்பு அதிகரிப்பு

    உயிரிழப்பு அதிகரிப்பு

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

    3 கோரிக்கை

    3 கோரிக்கை

    கொரோனாவின் தீவிரம் குறையாததால்மே-10 முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே செல்வமணி. கடந்த வாரம் நாங்கள் முதல்வரை சந்தித்தபோது, ​ திரைப்பட படப்பிடிப்புகளை அனுமதிப்பது, பண உதவி வழங்குவது மற்றும் திரைப்படத் துறையின் உறுப்பினர்களுக்கு தடுப்பூசி முகாம் 3 கோரிக்கைகளை முன்வைத்து இருந்தோம்.

    படப்பிடிப்பு நிறுத்தம்

    படப்பிடிப்பு நிறுத்தம்

    ஆனால், தற்போது நிலைமை மோசமாக உள்ளதால், நாங்கள் முதல்வர் முன் வைத்திருந்த கோரிக்கைகளில் ஒன்றை திரும்பப் பெறுகிறோம் தளிர்வுகளை அனுமதிக்க வேண்டாம். தற்போதைய சூழ்நிலையில், மே 31 வரை எந்தவொரு திரைப்பட வேலைகளிலும் பங்கேற்க மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம் என்று கூறியிருந்தார்.

    Recommended Video

    Serial படபிடிப்பு தளத்தில் 30ல் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி | Rk Selvamani Pressmeet
    தொழிலாளர்கள் பாதிப்பு

    தொழிலாளர்கள் பாதிப்பு

    இதையடுத்து இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்து படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் திரைப்பட தொழிலாளர்கள் மீண்டும் அவதிக்குள்ளாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நலிந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்.

    English summary
    Film, television shoots to be halted until May 31
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X