பிலிம்பேர் விருது விழா: மனைவியுடன் வந்து வதந்தி பரப்பியவர்களின் வாயை அடைத்த தனுஷ்
சென்னை: தனக்கும், மனைவிக்கும் இடையே பிரச்சனை என்று வதந்தியை பரப்பிவிட்டவர்களின் வாயை அடைப்பது போன்று தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் பிலிம்ஃபேர் விருது விழாவுக்கு வந்திருந்தார்.
61வது பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பிரமாண்டமாக நடந்த விழாவில் தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகைகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.

தனுஷ்
தனுஷுக்கும் அவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கும் இடையே பிரச்சனை. அதனால் அவர்கள் முகம் கொடுத்து கூட பேசுவது இல்லை. அதனால் தான் எங்கு வந்தாலும் தனுஷ் தனியாக வருகிறார் என்று வதந்தி பரவியது.

பணி
தனுஷ் பாலிவுட், கோலிவுட் என்று பிசியாக இருக்கிறார். ஐஸ்வர்யாவும் தனது வை ராஜா வை படத்தில் பிசியாக இருக்கிறார். வேலை காரணமாகவும் அவர்களுக்குள் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது என்று பேசப்பட்டது.

விருது விழா
பிலிம்ஃபேர் விருது விழாவுக்கு தனுஷ் தனியாக வரவில்லை. மாறாக தனது மனைவி ஐஸ்வர்யாவை அழைத்து வந்து வதந்தியை பரப்பியவர்களின் வாயை அடைத்துவிட்டார்.

ஐஸ்வர்யா
தனது கணவர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விமர்சகர்கள் விருது கிடைத்துள்ளதை ஐஸ்வர்யா ட்விட்டரில் தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

சூப்பர்
விருது விழாவுக்கு ஐஸ்வர்யா சிம்பிளான சேலையில் அதற்கு ஏற்றது போல நகை அணிந்து நச்சென்று வந்திருந்தார்.


Click it and Unblock the Notifications











