"பிலிமிபீட்".. ஒரே மாதத்தில் 100 மில்லியன் பேஜ்வியூஸ்களைத் தாண்டி சாதனை!
சென்னை: ஒன்இந்தியாவின் சினிமாப் பிரிவான பிலிமிபீட் இணையதளம் தொடங்கப்பட்ட ஒரே மாதத்தில் 100 மில்லியன் பேஜ்வியூஸ்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
முற்றிலும் புத்தம் புதிய சினிமா தளமாக பிலிமிபீட் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை ஒன்இந்தியாவுடன் இணைந்திருந்த இந்த சினிமாப் பகுதி தனிக் குடித்தனம் போனதுமே, ஒரே மாதத்தில் மாபெரும் பேஜ்வியூஸ்களைப் பெற்று அசத்தியுள்ளது.

சினிமா செய்திகள், சினிமா நிகழ்ச்சிகள், பட பூஜைகள், ஆடியோ விழாக்கள், வீடியோக்கள், கிசுகிசுக்கள் என சகல விதமான சினிமா செய்திகளும் புதுப் பொலிவுடன், பளிச்சிடும் வகையில் தருவது பிலிமிபீட்டின் பலமாகும்.
தொடங்கிய முதல் மாதத்திலேயே பிலிமிபீட் 100 மில்லியன் பேஜ்வியூஸ் என்ற சாதனையை எட்ட முக்கியக் காரணம்,.. வேறு யாரும் அல்ல சாட்சாத் வாசகர்களாகிய நீங்கள் மட்டுமே.
இந்த மாபெரும் வெற்றிக்கு உங்களுக்கு மிகப் பெரிய நன்றி கூறுவதோடு, தொடர்ந்து இந்த வெற்றிக் கொடியை உயரப் பறக்க கூடவே இருங்கள் என்றும் பாசத்தோடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறோம்...!
தேங்க்ஸ் மக்காஸ்...!


Click it and Unblock the Notifications











