நயன்தாரா சிக்கமாட்டார் அன்றே சொன்ன ஃபிலிமிபீட்..ICMR கீழ் விசாரணை அரசு விசாரணையும் உறுதிப்படுத்தியது
நயன் -விக்கி தம்பதி வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெற்றதால் அவர்கள் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என எழுதினார்கள்.
ஆனால் இது குறித்த தெளிவான சட்டப்பார்வையுடன் ஃபிலிமி பீட் எழுதியது.
இதனால் இதைப்பின்பற்றி தெளிவாக ஊடகங்கள் வாடகைத்தாய் சட்டம் குறித்து எழுதின. இன்று அரசும் அந்த சட்டம் மூலம் விசாரிக்காமல் ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் அடிப்படையில் விசாரித்துள்ளனர்.

வாடகைத்தாய் குழந்தை சர்ச்சையில் சிக்கிய நயன் விக்கி தம்பதி
நயன்தாரா விக்னேஷ் தம்பதி வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெற்றதில் விதிமீறல் இல்லை என அரசு நேற்று அறிவித்துள்ளது. குழந்தைப்பெற்றது குறித்த அறிவிப்பை விக்னேஷ் வெளியிட்டவுடன் சமூக வலைதளத்தில் ஒருவர் வாடகைத்தாய் சட்டம் குறித்து போட அதையொட்டி பிரச்சினை எழுந்தது. வாடகைத்தாய் சட்டத்தால் இருவருக்கும் சிறை உறுதி என எழுதினர். அமைச்சரிடம் கேட்டபோது அவர் விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்தார்.

வாடகைத்தாய் சட்டம் குறித்த புரிதல் இல்லாமல் ரியாக்ட் செய்தவர்கள்
பலரும் வாடகைத்தாய் சட்டம் குறித்த புரிதல் இல்லாமல் நயன் விக்கி சிக்குவார் என எழுத, ஃபிலிமி பீட் சார்பில் சட்ட நிபுணரிடம் எடுத்த பேட்டியில் வாடகைத்தாய் சட்டம் குறித்த தெளிவான புரிதல் வெளியானது. வாடகைத்தாய் சட்டம் எந்த விதத்திலும் நயன் -விக்கியை கட்டுப்படுத்தாது என்று மறுநாளே பேட்டியை வெளியிட்டோம். அதன் பின்னர் பிரச்சினை திசை மாறியது. அனைவரும் சட்டம் குறித்த புரிதலில் கருத்தை மாற்றினர். இந்நிலையில் அரசு விசாரணை நடத்தி நயன் விக்கிக்கு பிரச்சினை இல்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதிலும் புரிதல் இல்லையா? வாடகைத்தாய் சட்டப்பிரிவின் கீழ் இல்லை விசாரணை
அரசின் அறிக்கையில் " விசாரணையில் தம்பதியர்கள் மற்றும் வாடகைத்தாய் ஆகியோருடைய வயது இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன ஐ.சி.எம்.ஆர் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகை தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரியவந்தது. வழிகாட்டு நெறிமுறைகளின் பிரிவு 3.10.5 படி வாடகை தாய்க்கு உரிய தகுதியான வயதிலும் அவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆன குழந்தை உள்ளது. திருமணம் மார்ச் 2016 இல் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது திருமண பதிவு சான்றிதழ் உண்மை தன்மை பதிவு துறை உறுதி செய்யப்பட்டுள்ளது". என தெரிவித்து சட்டவிதி மீறப்படவில்லை என அரசு தெரிவித்துள்ளது. அது என்ன ஐசிஎம் ஆர் விதி. வாடகைத்தாய் நெறிப்படுத்துதல் சட்டம் என்ன ஆனது, அதன் கீழ் ஏன் விசாரிக்கவில்லை என்கிற கேள்வி எழுந்தது.

விளக்கம் அளித்த வழக்கறிஞர் என்.ரமேஷ்
அரசின் அறிவிப்பு குறித்து ஏற்கெனவே இச்சட்டம் குறித்து பேட்டி அளித்த வழக்கறிஞர் ரமேஷிடம் கேட்டபோது அவர் இச்சட்டத்தின் கீழ் இப்பவும் அரசு விசாரணை நடத்தவில்லை என்று அதிர்ச்சியை கிளப்பினார். அவரது பேட்டிவருமாறு, "நயன் விக்கி விவகாரத்தில் இப்போதும் நாம் சொன்னதுதான் நடந்துள்ளது. வாடகைத்தாய் நெறிபடுத்துதல் சட்டத்தின் கீழ் இவர்களை கேள்வியே எழுப்ப முடியாது, அவர்களை சட்டம் கட்டுப்படுத்தாது என்றோம். அதுதான் நடந்துள்ளது என்பதை அரசின் அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.

வாடகைத்தாய் சட்டம் அவர்களை கட்டுப்படுத்தாது என்பதால் அதன் கீழ் விசாரணை இல்லை.
அரசு விசாரணைக்குழு நயன் விக்கி விவகாரத்தில் விசாரணை நடத்தியது 2005 ஆம் ஆண்டு வெளியான ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் பிரிவின் கீழ் தான். இந்தப்பிரிவின் கீழ் மட்டுமே அவர்களை விசாரிக்கலாம். ஆனால் அந்த ஐசிஎம் ஆர்-2005 பிரிவு வழிகாட்டுதலுக்கு மட்டுமே, அதை வைத்து தண்டனை தர முடியாது. 2022 வாடகைத்தாய் நெறிப்படுத்துதல் சட்டம் இவர்களை கட்டுப்படுத்தாது என்பதால் தான் அரசும் அந்த பிரிவின் கீழ் விசாரிக்கவில்லை. 2005 ஐசிஎம்ஆர் பிரிவின் கீழ் விசாரித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனாலும் இப்போதும் தவறாக புரிந்துக்கொண்டு வாடகைத்தாய் நெறிப்படுத்துதல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தியதுபோல் பலரும் வெளிப்படுத்துகிறார்கள்" என்று தெரிவித்தார்.

இதிலும் தெளிவை கொடுக்கும் ஃப்லிமிபீட்
இந்த விவகாரத்தில் முதன் முதலில் செய்தி வெளியிட்டு சட்டப்பிரிவை மேற்கோள் காட்டி வழக்கறிஞர் பேட்டியை வெளியிட்ட நாம், இப்போதும் விசாரணை எந்த சட்டப்பிரிவின் கீழ் நடத்தப்பட்டுள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை வழக்கறிஞரிடம் பேசி தெளிவுப்படுத்தியுள்ளோம். ஆகவே ஏற்கெனவே நாம் பதிவிட்ட சட்டப்பிரிவு அதன் மூலம் நயன் விக்கிக்கு பிரச்சினை இல்லை என்பது தற்போது அச்சட்டப்பிரிவின்கீழ் விசாரிக்காததனால் தெளிவாகிறது.


Click it and Unblock the Notifications