பகாசூரன் கில்மா படமா.. பயில்வான் ரங்கநாதனின் ஹாட் விமர்சனம்!
சென்னை : செல்வராகன் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ள பகாசூரன் படம் குறித்து பயில்வான் விலாவரியாக விமர்சித்துள்ளார்.
இயக்குனர் மோகன் ஜி இயக்க சாம் சி எஸ் இசையமைத்திருகிறார். மேலும் நடராஜ், ராதாரவி, ராஜன், மன்சூர் அலி கான், தர்க்ஷ, என பலர் நடித்துள்ளனர்.
ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

பகாசூரன்
பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் பகாசூரன் படத்தின் ப்ளஸ் மைனஸ் குறித்து பேசி உள்ளார். அதில் ஜி மோகன் ஆரம்பத்தில் இயக்கிய திரௌபதி சாதி படம், ருத்ரதாண்டவம் சாமி படம், பகாசூரன் கில்மா படம் என்று விமர்சனத்தை தொடங்கும் முன்பே அதிரடி கிளப்பினார்.

படத்தின் கதை
இந்த படத்தின் கதை என்னவென்றால், ஒரு கிராமத்தில் தெருக்கூத்து கலைஞராக இருக்கிறார் செல்வராகவன். தனது மகளின் விருப்பப்படி கல்லூரியில் படிக்க வைக்கிறார். ஆனால்,கல்லூரிக்கு போன மகள் காதல் வலையில் விழுந்து ஒருவரை காதலிக்கிறார். காதலிக்கும் போது, காதலனுக்கு முத்தம் கொடுத்த வீடியோ கல்லூரி முதல்வர் கையில் சிக்குகிறது. அந்த வீடியோவை வைத்து மிரட்டி, செல்வராகவனின் மகளை பாலியல் பலாத்காரம் செய்கிறார். இதனால், அந்த பெண் தற்கொலை செய்து கொள்கிறார்.

பழித்தீர்க்கிறார் செல்வராகவன்
மகளின் தற்கொலைக்கு காரணமானவர்களை தேடிச் தேடிச் சென்று பழிதீர்க்கிறார் செல்வராகவன். அதே போல, அண்ணன் மகள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்ள அதற்கான காரணத்தை தேடுகிறார் நட்டி. செல்வராகவன் மற்றும் நட்டி இருவரும் சந்திக்கும் புள்ளியே பகாசூரன் திரைப்படம் கதை.

அட்டகாசமான நடிப்பு
செல்வராகவன் அட்டகாசமாக நடித்து இருக்கிறார், ஒரு தெருக்கூத்துக் கலைஞருக்கு, கதாநாயகன் போலவே பத்து பேரை அடித்து தூக்கும் அளவுக்கு உடம்பில் வலு இருக்குமா என்பது தான் சந்தேகம். ஏற்கனவே செல்வராகவன் இயக்குநர் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன் என்று கூறியிருந்தார். இருந்தாலும், அவர் பரபரப்பாக எதையும் செய்யவில்லை.

லாஜிக் மிஸ்ஸிங்
உயர் போலீஸ் அதிகாரியாக வரும் தேனப்பன் வில்லனா... நல்லவானா.. கெட்டவனா.. என்பது தெரியவே இல்லை. இதுவும் இடைவேளைக்கு பிறகு அவர் கதாபாத்திரம் என்ன ஆனாது என்றே தெரியவில்லை. இப்பட படத்தில் பல இடங்களில் கண்டியூட்டி இல்லை, லாஜிக் இல்லை. அடுத்த கொலை கொலை செய்யும் காட்சிகளில் வன்முறை கொடூரமாக தெரிகிறது.

பகாசூரன் கில்மா படம்
பகாசூரன் படத்தில் கதை திரைக்கதை வசனம் எழுதிய இருக்கிறார் மோகன் ஜி, ஆரம்பத்தில் மோகன் இயக்கிய திரௌபதி சாதி படம், ருத்ரதாண்டவம் சாமி படம், பகாசூரன் கில்மா படம். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் படத்தில் கடைசியில் செல்போன் தான் பகாசூரன், அது பல தீமைகளை செய்கிறது என்ற கருத்தை சொல்ல முயற்சித்துள்ளார்.

பிற்போக்கு தனமாக கதை
ஆனால், சொல்ல வந்த கருத்தை தவறா சொல்லி இருக்கிறார். இந்த காலத்து பெண்கள் மிகவும் உஷாராக இருக்கிறார்கள். காதலன் தொட்டு பேசினாலே போட ஒழுங்காக இரு என்று மிரட்டுகிறார்கள். ஆபாசமாக பெண்களை படமெடுத்து மிரட்டுபவர்களுக்கு தண்டனை வாங்கி தராமல் பெண்களை ஒழுக்கமாக இருந்தால் பிரச்சனை வராது என்று சொல்வது பிற்போக்கு தனமாக உள்ளது என்று பகாசூரன் படத்தை வெளுத்து வாங்கினார்.


Click it and Unblock the Notifications











